Author Topic: முட்டையை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என தெரியுமா?  (Read 193 times)

Offline MysteRy


ஒரு டஜன் முட்டைகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து வைப்பது ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் வழக்கம். ஆனால் அப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது என புதிய ஆய்வு கூறுகிறது தெரியுமா?
இதனைப் பற்றி விரிவாக தெரிய தொடர்ந்து படியுங்கள்.
முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது.

பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.

சால்மோனெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர்சாதனப் பெட்டி தருகிறது. மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது. இருமடங்கு பெருகுகிறது.

சாதாரண அறைவெப்பத்தில்( 37டிகிரி) இந்த பேக்டீரியா இனப்பெருக்கம் செய்ய முடியாது. அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

ஐரோப்பா நாடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கக் கூடாது. அமெரிக்காவிலும் முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றமாகும்...