Author Topic: மண்பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.  (Read 490 times)

Offline MysteRy


மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும்.

எனவே தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும்.

மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.

குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும்.

ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது.

அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம்.
பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது.

மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.

உடலுக்கு மிகவும் நல்லது.

மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.