Author Topic: சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு பக்க விளைவுகளா?  (Read 9 times)

Online MysteRy


சீரகம் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக ஜீரண மண்டலத்தின் பிரச்சனைகளை போக்கும். அதற்காக பலரும் அதை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அது போலத்தான் சீரகமும். அளவாக எடுத்துக் கொண்டால் மருந்து அதுவே அதிகமானால் என்ன ஆகும் என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக எந்த ஒரு கார உணவும் சீரகத்தை பயன்படுத்தாமல் தயாரிப்பதில்லை. அதற்கு காரணம் அனைவருக்கும் தெரியுமோ, தெரியாதோ. உண்மை காரணம் அது ஜீரண சக்தையை அதிகப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும். வாய்வை குறைக்கும்.

அதற்காக உடல் நோய்களுக்காக உபயோகிக்க நினைத்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னரே உபயோகிப்பது நல்லது.

சாதரணமாக சீரக நீரை குடித்தால் தவறில்லை, அதுவே உடல் நோய்களுக்காக பயன்படுத்த நினைத்தால் மருத்துவருடன் கண்டிப்பாக ஆலோசனை செய்ய வேண்டும். மேலும் ஒரு சிலர் சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு அசைத்துக் கொண்டிருப்பார்கள் இது முற்றிலும் தவறு. அதிலுள்ள காரத்தன்மை மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும்.

சீரகம் வாய்ப் பிடிப்பிற்காக உபயோகிப்பதுண்டு. ஆனால் அதிக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்ச்ரிச்சல் உண்டாகும் கவனித்திருக்கிறீர்களா? அதிக அசிடிட்டி இருப்பவரகள் சீரகத்தை மிதமாக அல்லது குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

அதிகமாக சீரகத்தை உட்கொள்ளும் போது அடிக்கடி ஏப்பம் உண்டாகும். நீண்ட காலமாக சீரகத்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் அதிக அளவு ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறு நீரகம் பாதிக்கபடலாம்.

சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் கர்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, குறைபிரசவம் உண்டாவதற்கு கூட வாய்ப்பு உண்டு.

தினமும் சீரகம் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் உப்புசம் உண்டாகி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவைகள் உண்டாகும்.

மாதவிடாய் காலங்களில் அதிக அளவு சீரகத்தை உட்கொள்வதால், மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்படும்.

சீரகம் சர்க்கரை அளவை ரத்தத்தில் குறைக்கச் செய்யும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகம் சாப்பிடும்வதை தவிருங்கள்.