Author Topic: புற்று நோய் வராமல் தடுக்கும் 3 வகையான வெள்ளரி நீரும், அவற்றின் நன்மைகளும்  (Read 8 times)

Offline MysteRy


வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன. இதனுடன் மற்ற காய் பழங்களையும் சேர்த்து செய்யப்படும் நீர் வகைகளை குடிப்பதான் உண்டாகும் பலன்களும் செய்முறைகளும் பார்க்கலாம். விட்டமின் சி நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை தடுக்கிறது. புற்று நோய் வராமல்
வெள்ளரி, எலுமிச்சை நீர் :
வெள்ளரி- அரை
எலுமிச்சை - 1
புதினா இலை = கையளவு
உப்பு - சிறிதளவு.
நீர்
எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டுக் கொள்ளவும். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.
பலன்கள் :
கொழுப்பை குறைக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சூட்டை தணிக்கும்.
திராட்சை வெள்ளரி நீர் :
வெள்ளரி - அரை
பச்சை திராட்சை - 10
எலுமிச்சை - அரை மூடி
மிளகுத் தூள் - தூவ.
நீர்
வெள்ளரி, திராட்சை, எலுமிச்சையை பொடியாக நறுக்கி ஜாரில் போடுங்கள். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் அந்த நீரை கழித்து குடிப்பதற்கு முன் மிளகுத் தூளை தூவி பருகுங்கள்
பலன்கள் :
உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.
இள நீர் மற்றும் வெள்ளரி நீர் :
வெள்ளரிக்காய் - 1
இள நீர் - 1
எலுமிச்சை இலை - 2
சீரகப்பொடி - சிறிதளவு
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாரில் இந்தகலவைகளை போட்டு இவற்றுடன் இள நீரை ஊற்றுங்கள். ஜாரை அப்படியே அரை மணி நேரம் வைத்து அதன்பின் பருகவும்
பலன்கள் :
அனைத்து சத்துக்களும் கிடைக்கும். நீரசத்து சமன் செய்யும். புற்று நோய் வராமல் தடுக்கும். முதுமையை தடுக்கும்.