Author Topic: மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?  (Read 7 times)

Offline MysteRy



பெண்களிடம் தன்னைத்தானே வர்ணிக்க சொல்லும்போது, வெறும் 2% பெண்கள்தான் அவர்களை அழகானவர்களாக வர்ணிக்கிறார்கள்

உலகத்திலேயே வெறும் 6% மருத்துவர்கள் மட்டுமே தங்களின் பணியை விரும்புகின்றனர்

கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களை பார்ப்பதற்கு சூதுவாது அறியாதவர் போல அப்பாவியாக தோற்றமளிப்பார்கள், ஆனால்…. உண்மையிலேயே மற்ற பெண்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்களே

நாம் தூங்குவதற்கு முன்பு எவர் நம் நினைவில் இருக்கிறாரோ…. அவர்தான் நம்முடைய மகிழ்ச்சி அல்லது துன்பதுக்கு காரணமானவர்.

நாம் ஓடுவதை போல கனவு கண்டால்… நம்முடைய நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து/கஷ்டத்திலிருந்து ஓடிகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

99% பேர், "நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் " என்று யாராவது சொல்லும்போது பதற்றம் அடைகின்றனர்

12 வயதிலிருந்து 22 வயது வரை நாம் கேட்கும் பாடல்கள், வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாததாக இருக்கும்

நம்முடைய படுக்கையறை எந்த அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கெட்ட கனவுகள் வர வாய்ப்புண்டு

நமக்கு என்றும் முதலில் மற்றும் கடைசியில் இருக்கும் விடயங்கள் மற்ற விடயங்களை விட நன்றாகவே ஞாபகம் இருக்கும். எனவே, நேர்காணல்

போன்றவற்றைக்கு போகும்போது முடிந்தவரை முதலாவது அல்லது கடைசி நபராக போவது நலம்
உளவியலை பொருத்தவரை நாம் நம்மை நேசிப்பவர்களை உதாசினம் படுத்திவிட்டு, நம்மை வெறுப்பவரையே தேடி செல்கிறோம்.

ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபுடிக்க திடீரென உங்கள் கைக்கடிகாரத்தை பாருங்கள். ஒருவேளை அந்நபர் உங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றால் அவரும் தன்னையறியாமல் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார்.

நமக்கு நாம் சமைத்த உணவை விட பிறர் சமைத்த உணவே இன்னும் சுவைமிக்காதாக இருக்கும்
ஒரு விவாதத்தில் வெற்றி பெற அதிகமான கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் எதிரே இருப்பவர் வலுவிழந்து விடுவார்

பரீட்சைகள் நம்முடைய புத்திசாலித்தனத்தை சோதிப்பதில்லை. நம்முடைய நினைவாற்றலையே அளவிடுகிறது.

கோவக்காரர்களால் சாதாரண மனிதர்களை விட இன்னும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் சிந்திக்க இயலும்

ஒருவர் நம்மை முறைத்து பார்ப்பதை, நாம் தூங்கிகொண்டிருக்கும்போது கூட உணர முடியும்
போலியாக சிரிப்பது ஒருக்கட்டத்தில் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைக்கும்
நாம் பொய் பேசும்போது அதிகமாக கண்களை இமைக்கிறோம்

இரவில் தாமதமாக தூங்க செல்பவர்கள் வாழ்க்கையில் அதிகமான சவால்களை எதிர்நோக்க விரும்புவார்கள்
ஒரு நண்பர் வட்டத்தில் மூன்று நான்கு பேரோடு சிரித்து கொண்டிருக்கும்போது, யார் நம்மை முதலில் பார்க்கிறார்களோ அவர்களே நம்முடன் நெருக்கமானவர்கள்

நாம் உண்மையில் இருப்பதை விட, கண்ணாடியில் பார்க்கும்போது 5 மடங்கு அழகாக தெரிகிறோம்
ஒரு ஆண் பெரும் வெற்றியை தழுவும்போது தனக்கு அதிகமான பெண் துணைகள் தேவை என்று எண்ணுகிறார்.

ஒரு பெண் பெரும் வெற்றியை அடையும்போது தனக்கு ஆண் துணையே தேவையில்லை என்று எண்ணுகிறார்
ஒருவர் தொடர்ந்து பேசவேண்டும் என்று நினைத்தால், அவரின் கண்களையே பாருங்கள். அவர் தொடர்ந்து பேசுவார்

28 நாட்களுக்கு நம்மால் ஒரு விடயம் இல்லாமல் வாழமுடியுமென்றால் (உதா. மது, தொலைபேசி ), வாழ்நாள் முழுக்க 100% நம்மால் அது இல்லாமல் வாழமுடியும்.

உளவியல் படி, ஒரு பெண்ணிடம் பொய் பேசுவதை தவிர்க்கவும். பெரும்பாலும், பெண்கள் உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டுதான் உங்களிடம் அதைப்பற்றியே கேட்பார்கள்

அதேநேரம் ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள் பெண்களே, பொய்யை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டதும் பெண்களே
நம்முடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்வதன் மூலம் 70% விவாகரத்துக்கான வாய்ப்பை குறைக்கலாம்
நாம் தட்டச்சு (typing) செய்தவற்றை விட கைப்பட எழுதியவையே நினைவில் இருக்கும்

ஆண்களை விட பெண்களே அதிக நகைச்சுவை மிக்கவர்கள். ஆனால், நெருக்கமானவரை தவிர வேறு யாரிடமும் அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை
நம் கனவில் காணும் ஒவ்வொரு முகமும் நாம் இதற்கு முன்பு பார்த்த முகங்கள் தான்.

நம் மூளைக்கு புதிய முகங்களை உருவாக்க தெரியாது
ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது

சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டவர்கள் நிஜத்தில் பார்த்துக்கொண்டவர்களை விட சீக்கிரமாக இணைந்துவிடுவார்கள்

நாம் ஒரு பிரச்சனை பற்றி ஆழமாக சிந்தித்து கொண்டே தூங்கிவிட்டால், நம் மூளை அன்றிரவு முழுக்க இயங்கிக்கொண்டு தான் இருக்கும். மறுநாள் நாம் சோர்வாக விழிப்போம்

உலகத்தில் உள்ள கோடிஸ்வரர்களில் பெரும்பான்மையினர் அகநோக்குனர் (introvert) ஆவர்
மன அழுத்தத்திலிருந்து விடுபட 80 விழுக்காட்டினர் பாடல்களை கேட்கிறார்கள்

ஒரு வருடத்தின் அதிகமான தொலைபேசி அழைப்புகள், அன்னையர் தினத்தன்று நிகழ்கிறது

மனிதரை விட மிருகங்களால் ஒருவரின் மனநிலையை எளிதாக புரிந்துகொள்ள முடியும்

ஒரு சுற்றுலாவிற்கு செல்வதற்குமுன் ஒரு நல்ல வாசனை திராவியத்தை வாங்கி அந்த சுற்றுலாவின்போது அதை பயன்படுத்துங்கள்.

அடுத்தமுறை அந்த வாசனையை நுகரும்போது அந்த சுற்றுலாவின் ஞாபகம் வரும்

ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள கருப்பு நிற ஆடையை அணியலாம்
40% பெண்கள் தங்கள் தோழர்களுக்காக சர்வ சாதாரணமாக தன் காதலை விட்டு கொடுக்கிறார்கள்

நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டால், எவ்வளவு முயற்சித்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை மீண்டும் அவர்மேல் வைக்க இயலாது
"நீங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் " என்று சொல்லும்போது நாம் ஒன்றும் செய்வதறியாது

விழிப்போம் . "நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது " என்று சொல்லும்போது நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்போம்
புதிதாக ஒருவரை சந்திக்கும்போது முடிந்தவரை அவருடைய பெயரை சொல்லி அழையுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பெயரை பிறர் சொல்வது பிடிக்கும். Q நாம் அவர்களுடன் சுலபமாக நெருக்கமாகலாம்

நாம் 15 நிமிடங்கள் அசையாமல் இருந்தால், தூங்கிவிடுவோம்

6 வினாடிகளுக்கு மேல் ஒருவர் நம் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நம்முடன் நெருங்குவதற்கு அல்லது நம்மை கொலைசெய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று அர்த்தம்

ஆண்களுக்கு அதிகம் சிரிக்கும் பெண்களை பிடிக்கும் ஆனால் பெண்களுக்கு அதிகம் சிரிக்காத ஆண்களை பிடிக்கும்

ஒரு சராசரி மனிதர் ஏறக்குறைய 70000 விடயங்களை ஒரு நாளில் சிந்திக்கிறார்

அறிவாளிகள் என்றும் அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்

நகைச்சுவையை எளிதாக புரிந்துக்கொள்ளுபவரால், பிறருடைய சிந்தனையை அறிந்துகொள்ள முடியும்
10 லிருந்து 29 வயது வரை உள்ளவர்களில், 90 விழுக்காட்டினர் தங்கள் தொலைபேசியுடன் உறங்குகிறார்களாம்

ஒருவரை நமது சிந்தனையிலிருந்து அகற்ற முடியவில்லையென்றால், நாமும் அந்த நபரின் சிந்தனையில் இருக்கிறோம் என்று அர்த்தம்

நன்றி ❤