Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
காலக்கண்ணாடி
»
சைமன் காசிச்செட்டி:
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சைமன் காசிச்செட்டி: (Read 85 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222553
Total likes: 27625
Total likes: 27625
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
சைமன் காசிச்செட்டி:
«
on:
July 09, 2025, 10:37:19 AM »
19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.
#இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
#தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச்செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது.
வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர்.
காலப்போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச்செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம்வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, #சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, லத்தீன், கிரேக்கம், #எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். இவரது பதினேழாவது வயதில், 1824 ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொன்றாவது வயதில் 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார்.
தனது இருபத்தேழாம் வயதில் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் முதலியாராகவும் எற்கனவே இருந்த மணியக்காரர் பதவியிலும் பணியாற்றினார்.
கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ.குமாரசுவாமி முதலியார் 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது,
1838 இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார்.
பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார்.
இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும்.
தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பற்றி எழுதியதோடு, தமிழ்வடமொழி அகராதி,
ஆங்கில - தமிழ் அகராதி,
தமிழ்த்தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார்.
யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன.
இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் கூடப் புகழ் பெற்றார்.
இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார். இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், தமிழ் புளூட்டாக்" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த #முதல்நூல் இதுவே என்று கூறப்படுகின்றது.
இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
#மாலத்தீவு மொழியிலே சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
கத்தோலிக்க சமயம் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்கத் தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் எழுதியுள்ளார்.
#கிரேக்க மொழியிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ என்பவர்பற்றிய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார்.
#புத்தளப்பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார்.
சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார்.
திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
#சைமன் காசிச்செட்டி 1860 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று தமது ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
காலக்கண்ணாடி
»
சைமன் காசிச்செட்டி: