Author Topic: முற்றிய பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்  (Read 11 times)

Offline MysteRy


பூண்டில் மாங்கனீசு, விட்டமின் B6, விட்டமின் C, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

அதிலும் சாதாரண பூண்டுகளை விட முதிர்ந்த பூண்டின் சாற்றில், அதிகளவு சத்துக்கள் உள்ளது என்று மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

முற்றிய பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முற்றிய பூண்டை சாப்பிடுவதால், அது ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
முற்றிய பூண்டில் உள்ள சாறு நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
முற்றிய பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடுவதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைந்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முற்றிய பூண்டில் உள்ள ஆர்கனோசல்பர் (Organosulfur) எனும் உட்பொருள் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதை தடுத்து, கல்லீரலின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
முற்றிய பூண்டு சாறு நோயெதிர்ப்பு செல்களின் அளவை அதிகரித்து, நமது உடலின் ஆரோக்கியத்தை தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடி, நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
முற்றிய பூண்டு சாறு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. எனவே தினமும் முற்றிய பூண்டு சாற்றினை எடுத்து கொள்வது நல்லது.
முதிர்ந்த பூண்டு சாற்றில் சக்தி வாய்ந்த ஆக்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள செல்களுக்கு நல்ல பாதுகாப்பை அளித்து, முதுமை, மன அழுத்தம், உடல் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

குறிப்பு

அன்றாடம் முதிர்ந்த பூண்டின் சாற்றினை உணவுடன் சேர்த்து கூட சாப்பிட்டு வரலாம்.