Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 377  (Read 174 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .


Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.



நிழல் படம் எண் : 377

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Lakshya

சிறைக்குள் கதறும் சத்தம்,
வாழ்க்கையில் இனி இருள் வட்டம்...
தண்டனையின் பெயரில் லத்தி அடி ஆட்டம்,
கண்ணீர் நிறைந்த கண்கள் சொல்லமுடியாத வலிகள்...

உடல் மட்டும் இல்லாமல் மனதளவிலும்
வலிகளை சுமந்த கைதிகள்...
சத்தமின்றி சாகும் மௌன குரல்,
சத்தம் எழும்பும் இடத்தில் மெளனமாய் கூச்சலிட்டான்...

கையில் சங்கிலி, மனதில் பாரம்
சொல்லி கண்ணீர் விட நாதி இல்லை...
சிறை சுவற்றில் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட படங்கள்,
நீதி கேட்டால் மீண்டும் கிடைப்பது லத்தி அடியே!!!

கைகளில் சாவி இருந்தும் திறக்க மறுத்த
அதிகாரிகள் மத்தியில், உயிரை கையில் பிடித்து
அடிவாங்கிய கைதிகளே
உங்களுக்கு நியாயம் கிடைக்க வழி இல்லையா?

கண்ணாடி போல் உடைந்த நீதி,நேர்மை...
தவறு செய்யாமல் அடி வாங்க பிறக்கவில்லையே நீ...
குற்றம் செய்யாதவன் ஏன் அடி வாங்க வேண்டும்?
அவன் மேல் விழும் அடி நியாயமானதா?

அவன் தனிமையை தாங்கிய சுவர்கள்
இப்போது ரத்த கரைகளையும் தாங்கி நிற்கிறது...
சிறையின் வெளியே ஒளி இருந்தும் சிறைக்குள் இருள் மட்டுமே...
நிழல்கள் மட்டும் வாழும் கருப்பு அறை, சிறை!

உன் ஒவ்வொரு கண்ணீருக்கும்
விடைகளை எங்கு தேடி செல்வாயோ நீ?
« Last Edit: July 07, 2025, 11:11:47 AM by Lakshya »

Offline Asthika

சுவரின் அந்தப்பக்கத்தில் சுதந்திரம்,
இப்பக்கம் — நினைவுகள் வலிக்கின்றன.
இரும்புக்கம்பிகள் என் விழிகளைக் கிழிக்க,
இருண்ட நாட்கள் என் நெஞ்சைக் நெகிழ்த்தன.

வானம் பார்க்க வாடைதான் வழி,
வாசல் பார்த்து காலமே கடிகாரம்.
குற்றமோ என் செய்தியில்லை,
அறிந்ததும் — தண்டனை மாறவில்லை!

நண்பர்கள் தொலைந்திட, நேரம் தகர,
அம்மாவின் குரல் கனவில்தான் வரும்.
என் எழுத்துகள் காகிதத்தில் போராடும்,
என் உயிர் மட்டும் ஒளி தேடும்!

தண்டனை அல்ல இது — பயணம்,
உணர்வுகளின் நடுக்கட்டுமானம்.
ஒரு நாள் — கதவுகள் திறந்திடும்,
கனவுகள் போலவே நானும் பறப்பேன்
கைதியாக இல்லையே என் உள்ளம்,
தவறுகள் செய்தது என் வாழ்வின் புலம்.
நாணமோ, ஆத்திரமோ தெரியாது எனக்குள்,
தீராத சுமையாய் நிமிர்கின்றேன் இன்று முழுக்க.

நேற்று ஒரு பேர் விழி பார்த்தேன்,
மழையில் நனைந்த குழந்தையைக் கண்டேன்.
அந்த பார்வை என் மனதைக் கிழித்தது,
பாவமும் பிணியும் ஒன்றாய் சேர்ந்தது.

என்னைப் போல் நிழல்களும் வாழ்கின்றன,
இங்கு எல்லாம் மேயும் வரிகள் கோபத்தில் இரங்குகின்றன.
தப்பே செய்தேன் – அதில் உண்மை இருக்கலாம்,
ஆனால் மனுஷனாய் வாழ விரும்பினேன் – அது தண்டனையா?

ஒரு நாள் சுவர்கள் தகரும்,
நான் உங்களைப் போலவே நழுவிப் பறக்கும்.
ஆனால் என் உள்ளம் விட்டுப் போகாது,
இங்கு விட்டிருக்கும் வரிகள் சாட்சி தரும்..

Offline Yazhini

கைமாறியது ஆசிரியரின் தடி
காவலர் கைகளுக்கு...
சின்னஞ்சிறு தவறுகள்
பெருங்குற்றங்களாக திரிபுப்படுகின்றன.

தேசத்தைத் தாங்க வேண்டிய
பல இளைஞர்கள் கைகளில்
இன்றோ கைவிலங்குகள்...

இதை பெற்றோர் பிழை என்பதா ?
சமூகத்தின் பிழை என்பதா ?
தடம் மாறும் குழந்தைகள்,
தடுமாறும் சமூகம்.

கொஞ்சிபேசி விளையாட வேண்டிய
பல குழந்தைகள் வாயில்கூட இன்று
பான்மசாலாவும் கூல்லிப்பும் கஞ்சாவும்
இன்னும் பல போதைவஸ்துகளும்.

குற்றச் செயலுக்கு வித்திடும் போதை
நிரம்பிவலியும் சிறைச்சாலை
இதற்கு விடிவு நல்லொழுக்கத்தைப்
போதிப்பது கல்விசாலை மட்டுமல்ல
சமூகமும் என்ற தெளிவு.

பொறுப்பற்று வளர்க்கப்படும் குழந்தைகள்
போதையில் திளைக்கும் இளைஞர்கள்
நெறிப்பிறழ்வதால் உருவாகும் குற்றவாளிகள்
சமூகத்தின் தீரா நோய்கள்.

கட்டுங்கடங்கா குற்றங்களின் துவக்கம்
சிறுதவறுதான் என்பதை
காவளரின் தடி உணர்த்தும்முன்
நாம் உணர்வதே
சமூகத்தின் விடுதலை!!!
« Last Edit: July 07, 2025, 01:50:59 PM by Yazhini »

Offline Thenmozhi



மனிதனுக்கு மனிதன் அடிமையா?
அவிழ்த்துக் கை விலங்குகளை!
தவறுகள் பல செய்தவனை
கைவிலங்கு கொண்டு பூட்டினால்- கைவிலங்கு மாறிவிடாதோ கறையின் அடையாளமாக!

சட்டங்கள் சரிவர இயற்றப் பட்டால் -எதற்காக
சாமானிய தவறு செய்யாதவன் சிறையில் ஆயுள் கைதியாக!
சட்டத்தை ஏழ்மை,பணக்காரன் பாகுபாடின்றி இயற்றுங்கள்!

குற்றம் செய்தவன் குற்றாலத்தில் கூத்தாட,
குற்றம் புரியாதவன் குற்றுயிராய் சிறையில் வாட,
சிறையில் இருப்பனை அவன் குடும்பம் தேட,
பணக்கார குற்றவாளி பொய்யான ஆதாரங்கள் தேட,
நீதிபதி தீர்ப்பு கொடுக்க திண்டாட,
ஊழல் பலவிதங்களில் நடனமாட,
பறிபோவது பாவப்பட்ட சுற்றவாளி உயிர் தான்!

சிறை வாழ்க்கை மிகவும் கொடுமை என அனுபவித்தவர்கள் வாயிலாக அறிந்த வலிகள் சில....
இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல்,
இஷ்டப்பட்ட சாப்பிட்டை சாப்பிட முடியாமல்,
சிறைக்குள்ளும் ஊழல்,பாலியல் பலாத்காரம்,
நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கும் கைதிகள்!
உண்மையான குற்றவாளி தண்டிக்கப் படலாம்!
நிரபராதி ஒருபோதும் தண்டிக்கப்பட்ட கூடாது!

நாட்டில் எத்தனையோ திருட்டுகள்,கொலைகள்,கடத்தல்கள்,ஆணவ படுகொலைகள்,பாலியல் பலாத்காரங்கள்!
குற்றவாளிக்கு விலங்கிட்டு சிறையில் அடைத்து ,
உரிய தண்டனை வழங்கிடு சட்டமே!

சட்டமே நான் உன்னை மதிக்கிறேன்!
குற்றவாளியை சரியாக இனங்கண்டு தண்டனை வழங்கிடு!
இவ்வுலகில் குற்றங்கள் அரிதாகும்!
சட்டமே நீ நிரபராதி தண்டிக்க வக்ரத்தால் குற்றங்கள் அதிகரிக்கும்!
சட்டமே ஊழலுக்கு அடிமை ஆகாதே!
உணர்வுகளுக்கு மதிப்பளித்து ,உண்மையான தீர்ப்பு வழங்கிடு சட்டமே!
சட்டமே உன்னை தலை வணங்குகின்றேன் எப்போதும்!
« Last Edit: July 07, 2025, 06:42:12 PM by Thenmozhi »

Offline சாக்ரடீஸ்

காவல் நிலையம்
நம்பிக்கையின் கோட்டை
ஆனால்
இன்று உயிர்கள் பறிக்கும்
அதிகார வேட்டை

உயிர்கள் தவிக்கின்றன
நீதி கோரும்
குரல்களை புறக்கணிக்கின்றனர்
அப்பாவிகள் அழுது
கதறும் ஒலியை
இன்பமாக ரசிக்கின்றனர்

மனித உரிமைகள் மிதிபட்டு
இருள் நிறைந்த
இரும்புக் கதவுகளுக்குள்
நீதியின்மை ஆதிக்கம் செலுத்துகிறது

பத்மினியின் கண்ணீர்
மண்ணைத் தழுவுகிறது
ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின்
கூக்குரல் வானைத் தொடுகிறது
அஜித் எனும் இளைஞனின்
இரத்தம் சுவற்றில் உலர்கிறது
நியாயம் எதிர்பார்த்தவர்களுக்கு
அதற்கான பதிலாய்
இறப்பு மட்டுமே பெற்றார்கள்

இதற்கு யார் காரணம் ?
இதற்கு யார் பொறுப்பு ?

காவல் என்ற பெயரில்
கோர முகமூடி
எங்கே மறைந்தது மனசாட்சி ?

தவறு செய்தோரை
சட்டம் சந்திக்கட்டும்
தண்டனை எனும் பாதை
நீதியின் வழியில் நடக்கட்டும்
அதிகார குரலில்
ஆத்திரம் பேசலாமா ?
அப்பாவி ஒருவன்
ஏன் அந்த வலியை
அனுபவிக்க வேண்டும் ?

காவல் என்றால்
காக்கும் கையாக
இருக்க வேண்டும்
மனிதம் இல்லாத
முறையில் நடக்கும்போது
நியாயம் கண்ணீர்
வடிக்கத்தான் செய்யும்

"ஜெய் பீம்" போல்
படங்கள் வந்தாலும்
காவலர்கள் தன்
சமூகக் கடமையை
மறக்கத்தான் செய்கிறார்கள்

நீதி ஒரு விளக்கு
அது வீதியில் எரியட்டும்
அப்பாவி உயிர்கள்
இனி தவிக்கக் கூடாது

காவல் என்றால்
காப்பவர் ஆகட்டும்
மனித நேயம் என்றும் வாழட்டும்

எந்தவொரு தாயின் கண்ணீரும்
இனி இந்த மண்ணில்
விழக் கூடாது
லாக்கப் இருளில்
உயிர்கள் மாயமாக கூடாது
நீதி என்ற ஒளி
எங்கும் பரவட்டும்
காவல் நிலையம்
உண்மையின் கோட்டையாகட்டும்.

Offline VenMaThI


காக்கிச்சட்டையில்  ஒரு  காவல் தெய்வம்
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து
இது என் கடமை என
உரக்க கூறும் ஒரு தெய்வம்...

அசம்பாவிதம் நடந்தாலும்
அறியாமையாய் இருந்தாலும்
அடிதடி கலவரம் ஆனாலும்
அரசியல் செல்வாக்கில் ஆடினாலும்

கடமை தான் தவறாமல் -  தான் எடுத்த உறுதிமொழிக்கு
கலங்கம் தான் நேராமல்
நேர்மை வழி நின்று நம் மக்கள்
நலனுக்காய் உழைத்த காலமெல்லாம்...

கனவாய் போன நாளாச்சு
காலமும் தான் மாறிப்போச்சு...
நம்பிக்கை வைத்த மக்களின்று
நொந்து போயி நிக்கிறாங்க..

காவல் காத்து நின்ன தெய்வம்
காவு வாங்கும் காலமாச்சு
காசு இருக்கும் கயவரிடம் - கைகட்டி நிப்பதால
நேர்மையும் தான் தோத்து போச்சு...

காசின் பலமா அல்ல அரசியல் ஆதாயமா
அலட்சியப்போக்கா அல்ல அதிகார துஷ்பிரயோகமா?
யாரோ சிலர் செய்யும் தவறுக்காய் - ஒட்டுமொத்த
காவல்துறையும் இன்று கலங்கப்பட்டு நிக்குது..

காவல்துறையே.. மக்களின் நண்பனே...

லஞ்சத்தை அல்ல லத்தியை மட்டும் பிடி
நிஜத்தை ஆராய்ந்து நேர்மையை கடைபிடி....
கடமை தவறாமல் கண்ணியமாய் பணியாற்று...
நம்பியுள்ள மக்களின் நன்மைக்காய் உழைத்தால்...
நாடும் நலம் பெரும்
மக்களின் நம்பிக்கையும் உயரும்.....


« Last Edit: July 07, 2025, 05:40:16 PM by VenMaThI »

Offline RajKumar

கறை படிந்த என் வாழ்க்கையை
மாற்றிடுமோ இந்த சிறை வாழ்வு
கம்பிக்குள் அடைப்பெற்றேன் கைதியாய்
கூண்டுக்குள் சிக்கிய பறவையாக நான்
வெளியுலகம் தெரியாமல்
உள்ளே சிறைக்கைதியாய்
என் சிறகை முறித்த கயவர்கள்
வெளியே நல்லவர்களாக
என் விதி செய்த விளையாட்டால்
நான் செய்ய குற்றத்திற்காக சிறை கைதியாய்
செல்வந்தர்களின் சூழ்ச்சியால்
நீதியும் தடம் மாறி போனது
தடம் மாறிய நீதியால்
என் வாழ்வும் நிலைமாறி
போனது கைதியாய்
என் இதயத்தின் கதறல் கேட்காமல்
கண்ணீர் துடைக்க அளிலில்லாமல்
என் துயரங்கள் துக்கம் மற்றும்
எதிர்பார்ப்பும்
மனதை விட்டு வார்த்தைகளை
பகிர்வதற்கு யாரும் இல்லாமல்
சிறைக் கம்பிக்குள் சிதையூண்டு
புதைந்து போனது கைதியாய்

நீதி தேவதையின் கண்க்களுக்கும்
கரி பூசிய விட்டார்கள்
தொலைந்து கொண்டிருக்கும்
என் வாழ்க்கைக்கு
நீதிக்காய்  காத்து கொண்டு இருக்கேன்
சிறைக் கைதியாய்

« Last Edit: Today at 12:22:17 AM by RajKumar »