கடலோர அலைகள் வந்து
கரையோர மணல்களை
உரசிக் கொஞ்சம் செல்ல,
நீங்கா உன் நினைவுகள்
மீண்டும் என் மனத்தோடு
அசைபோட்டு பதம் பார்க்க
எனக்காய் சுவாசித்தவளே!,
என்னை மட்டும் நேசித்தவளே!,
இருவராய் நாம் கண்ட கனவில்
இன்று
நான் மட்டும் பயணிக்கிறேன்
உன் நினைவுகளை மட்டும்
துணையாய் கொண்டு
பேசி சிரித்த தருணங்கள்
பேசாமல் எனை சூரையாடிய
உன் மௌனங்கள்
கண் ஜடையில் மயங்கிய காலங்கள்
செல்லமாய் கண்டித்த
உன் சிணுங்கல்கள்
கண் முன்னே மீண்டும் எழ
கலங்கி நிற்கிறேன் நான்
என்றாவது ஒரு நாள்
உனை சேரும் நாள் வரும் என்று
உன் காதலில் தொலைந்த என்னை
மீட்டெடுக்க யாரும் இன்றி,
உன்னை
தொலைத்த இடத்திலேயே
இன்றும் அமர்கிறேன்
மீண்டும்
நீ வருவாய் என ❤️