Author Topic: அண்ணா !  (Read 875 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1241
  • Total likes: 4254
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அண்ணா !
« on: June 12, 2025, 02:52:28 PM »
தம்பி பாப்பா வேண்டுமா
தங்கை பாப்பா வேண்டுமா
என பெற்றோர் கேட்டிருக்க வேண்டும்
நீ என்ன சொன்னாயோ

உனக்கு தம்பியாய் நான்,
நீ கைகளை நீட்டி கற்பித்த
சிறு நடையிலே,நானாகவே
பின்னே நடந்தேன்,

என் அழுகை
உன் கண்கள் நனைத்தது
என் சிறு புன்னகை
உன் நாட்களை சுவாரசியமாக்கின

நீ சிரித்தால்
என் உலகம் பூமாலை விரியும்,
நீ சோர்ந்தால்
என் இரவுகள் சோர்ந்திடும்.

அண்ணன் என்பது தம்பிக்கு
ஓர் கோபுர நிழல்
தந்தை வெளிக்காட்டா பாசம்தனை
உன் வழியில் கண்டேன்

அம்மாவின் மடியில்
நம் சிரிப்புகள் கலந்து
ஒரே மெத்தையின் நம் கனவும் கலந்தன

சிறு வயதில் நீ உடுத்திய துணி எல்லாம்
எனக்கு
நீ படித்த புத்தகம் எல்லாம்
எனக்கு

நீ வளர்ந்த பின்
எனக்காய் எனக்கு என
வாங்கி தந்தாய் புதிதாய்
தம்பிக்கு குடுங்க என்பாய்

குடிசையும் கோபுரமாகின
நீ இருப்பதால்

என் வாழ்வில் நீ என்றும்
அழிக்க முடியா அத்தியாயம்

நீ இருப்பதால்
இவ்வாழ்வு எனக்கு ஒரு
சொர்கம்



****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 303
  • Total likes: 623
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
Re: அண்ணா !
« Reply #1 on: June 19, 2025, 01:01:31 PM »
romba nalla irukku