Author Topic: அப்பாவை பற்றி சில வரிகள்💕  (Read 500 times)

Online MysteRy



தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
நேரத்தை நம்மோடு செலவிட முடியாத போதும், செலவிடும் நேரம் எல்லாம் நமக்காக மட்டுமே…

என் பெயரின் பின்னால் உன் பெயர், முன்னால் உன் முதலெழுத்து…

முதலிலும் நீ…முடிவிலும் நீ…

மகன்களுக்கு முதல் தோழனும் நீ… மகள்களுக்கு முதல் காதலனும் நீ…

ரகசியமான ஆழமான அன்பு, அப்பாவினோடது…

பிரசவ அறை வாசலில் தொடங்கி, கல்லூரி வாசல் வரை நமக்காக கால் கடுக்க நிற்கும் ஆலமரம் அப்பா…

தன்னையே உருக்கிய தலைவன் அவன்…

உயரத்திலும், வளர்ச்சியிலும் தன்னை விட வளர்ந்தாலும்,பொறாமைப்படாத உயர்ந்த உள்ளம் தந்தையின்னுடையது மட்டுமே…

தோழனுக்கு தோழனாகவும், கற்றுக்கொடுக்கும் ஆசனாகவும், என்றுமே நம் வாழ்வில்…

தனக்கு கிடைக்காதது, தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டுமென்றும், தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளை படக் கூடாதேன்றும், எண்ணும் தன்னலமற்ற தனிதன்…

தலை மேல் தூக்கி வைத்து, கொண்டாடும் தாயுமானவன்…

ஊர்வலத்தில் சாமியை, சாமி மேலயே, அமர்ந்து பாக்கும் பாக்கியம் பிள்ளைகளுக்கு மட்டுமே வாய்க்கும்…!

அப்பாவின் வரலாறை, வெடித்துப் போன பாதங்களிலும், நரம்பு தூக்கிய கைகளிலும் காணலாம்.

சாப்பிட்டானா(ளா) என்பதில் தொடங்கி, வாஞ்சையாய் பார்த்திடும் ஒற்றை பார்வையில் தெரிந்திடும் தந்தையின் பாசம்….

டேய்…என்ற ஒற்றை அதட்டலில் அடங்கிடும் சர்வ நாடியும்…அதட்டலும் நீயே…அகிலமும் நீயே…!

அம்மாவின் அத்தனை திட்டில் உறைக்காதது, அப்பாவின் ஒற்றை முக வாட்டத்தில் உறைத்திடும்…

மொத்தத்தில் அன்பான தாயுமானவன் நீ…!

அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல…!பிள்ளைகளின் வாழ்வு…!♥️

தாயுமானவர்கள்(தகப்பன்மார்கள்) அனைவர்க்கும் என் சமர்ப்பணம்.🙇🏻‍♀️🙏