அழுக்கி நீ !
உலக அழுக்கி நீ !
என்னை கவர்ந்த அழுக்கி நீ
அழகழகாய் ஆயிரம் பேர் இருந்தும்
அழகாய் எனை கவர்ந்த
அழுக்கி நீ !
உலக அழுக்கி நீ !
...
உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த
அழுக்கையும் அப்படியே அளவெடுத்து
ஒட்டி வைத்தாலும், கொட்டிவைத்தாலும்
உன் போல அழகில்லை என் அழுக்கியே !
அழுக்கழுக்காய் தான் உன் ஒரு சில
வெளிப்பாடுகள், இருந்தும் அழகாய்
மிக அழகாய் எனை தாக்கும் இடர்பாடுகள் .
நாள் ஒன்றிற்கு இரண்டு முறை , கோடை
வந்தால் அதுவே மூன்று முறை - உன்
வீட்டு தண்ணீருக்கு மட்டும்
மோட்சம் தருகிறாய், குளியல் அறையில்
அதனால் தானோ என்னவோ ?
இன்னமும் அழுக்கி நீ ...
நான் இருக்கும் கடுப்பில் இன்னும்
என்னனவோ எடுத்துரைக்க தான் எண்ணம்
இனி ஒரு வார்த்தையும் உரைத்தால்
என்னை தொலைத்து விடுவாய் என்பது திண்ணம் .
ஆகையால் சபையோர்களின் வேண்டுகோள் வண்ணம்
வர்ணிப்பினை நிச்சயம் தொடர்வேன் பின்னம் (பின்னர்) .