அனுமதியே இல்லாமல்
கூரையின் ஓட்டை வழியே
வெளிச்சத்தை காட்டும்
சூரியன் !
யேட்டுகல்விக்கு
ஏங்கும் சிறுவன்
வேலைக்கு செல் மகனே
தாய் ,
வயிற்றை நிரப்ப
கல்வியையும் குறைத்துகொள்ளும்
கால சூழ்நிலை !
சைக்கிளுக்கும்
வழியில்லாமல் ,
சாலையிலே தேய்ந்துப்போன
இவர்களது
கால் பாதங்கள் !
கால்கோமணம்
கட்ட ஆசைபட்டாலும் ,
வெற்று நாடகம் ஆடும்
இவர்கள் வீட்டு
கல்லாபெட்டி !
சில்லறை சிக்கனத்தால்
சல்லடை வேடம்
போடும்
இவர்களது
துணிமணி !
கல்யாண நாளோடு
அடகுகடையில்
ஆயுள் தண்டனை
அனுபவிதுகொண்டிருக்கும் ,
ஏழை மனைவியின் தாலி !
உழைப்பை அதிகரித்தும்
உணவு வேலை
எண்ணிக்கை குறைந்து
ஒரு வேலை உணவுக்குகூட
ஓராயிரம் கேள்விக்குறிகள் !