Author Topic: படித்து சிந்திக்க  (Read 702 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
படித்து சிந்திக்க
« on: June 01, 2025, 09:48:24 AM »


ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி. “பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்துவிட்டால் “எப்படி வெளியே வருவீர்கள்?” என்பதுதான்.

ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முயற்சித்து ஏறிவிடுவேன் என்றார் மற்றொருவர். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.

கடைசியில் ஒருவர் கேட்டார். “தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?”
“இல்லை” என்றனர் தேர்வுக் குழுவினர்.

“நான் விழுந்தது பகலிலா? அல்லது இரவிலா?”
“ஏதற்குக் கேட்கிறாய்?” என்றனர் தேர்வுக் குழுவினர்.
இவர் கூறியதாவது. “பகலில் குழியில் விழ நானொன்றும் கண் பார்வையற்றவர் இல்லை. கவனக் குறைவானவரும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் அல்ல. அதனால், கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை என்றான்.

அவர் பதில் மனநிறைவு ஏற்படுத்தியது தேர்வுக் குழுவினர்க்கு. அவரது வாக்குத்திறமை அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது.

ஆளுமை என்பது ஒரு திறமை, அதுவே மிகை ஆற்றலாகும். திறமை என்பது மற்றவரை ஏமாற்றுவதோ, தன் செயலை சாதித்து கொள்வதோ இல்லை! ° திறமை என்பது பேச்சுத் திறமை, அறிவுக் கூர்மை, தெளிந்த சிந்தனை, நம்பிக்கை, சரியாக முடிவெடுக்கும் திறமை, முடிவெடுக்கும் திறன். எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்து விடுவதில்லை!