Author Topic: தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது...  (Read 1513 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226279
  • Total likes: 28760
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி.. அங்கே சுற்றியும் நூற்றுக்கணக்கான நாய்கள் இருந்தன. சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது....

அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.

அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது.
இருந்தும் கோபம் தாளாமல் லொள் லொள் என குரைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது. அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது. அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது.

பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன....

" இந்த நாய் பயத்தின் உச்சத்தில் வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கி இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.....

இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்.

1. தான் நுழைந்தது நூற்றுக்கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று.

2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் தான் என்று.

3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் குரலின் எதிரொலி தான் என்று.

நீதி:
```````
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது....

நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்...

அன்பு செலுத்தினால்
அன்பு கிடைக்கும்...

"நீ எதை விதைக்கிறாயோ
அதுவே முளைக்கும்"...