Author Topic: காது மடல் அழுத்தத்தின் பயன்கள் தெரியுமா...?  (Read 244 times)

Online MysteRy



நம்மில் பலர்
காது மடலை வெறுமனே
ஒரு சாதாரண உறுப்பாகத்தான் பார்க்கின்றனர்.

பெண்களும்
அதனை காதணிகளை அணிந்து அழகு பார்க்க மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

ஆனால்
உடலியல் நிபுணர்கள் மேற்கண்ட ஆய்வுகளின் படி,

காது மடல்களானது மன மகிழ்ச்சிக்கும், மன ஆறுதலாக்குமான  முக்கியமான
ஒரு காரணியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஒருவர் சோகமாக இருக்கும் நிலையில்
அவரது காது மடலை தேய்த்து விடும் போது ஒரு சில வினாடிகளிலே அவர் மகிழ்ச்சியை உணர வழி வகுக்கும் என்றும்,

கோபத்தில் உள்ள ஒருவரின் காது மடலை அழுத்தம்
செய்யும் போது, அவர் சில நிமிடங்களில்
அமைதி நிலைக்கு திரும்ப வழிவகுக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது.

மேலும் காது மடல்களை அழுத்தம் செய்யும் போது மனித மூளைக்கு இரத்தம் பாய்ச்சப்படுவதால் உடலியல், உளவியல் மற்றும் சிந்தனை ரீதியாகவும் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என்று அறியப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொன்னால்
காது மடல்கள் மனிதனுக்கு
ஒரு உளவியல்
வலி நிவாரணியாக திகழ்கின்றன.