பாடகி : அனுராதா பாட்வால்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ………………..
ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று
பெண் : தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுரூதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
ஓ ஹோ ஓ…
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று
பெண் : கடல் நீரைக் கடன் வாங்கி
என் கண் கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பெண் : இடம் மாறி வந்தாலும்
தடம் மாறி போகாமல்
என் காதல் கைக்கூட கண்டேனம்மா
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
பெண் : எண்ணம் போல் வாழ்வு கண்டேன்
எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை
என் மஞ்சள் வாழட்டுமே
பெண் : மறு பிறப்பினிலும் ஏழு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும்
வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
ஓ ஹோ ஓ
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று
குழு : …………….
விசில் : ………………..
பெண் : ஆஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ
ஆஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ
பெண் : ஆண் என்றால் ஒரு வீடு
பெண் என்றால் இரு வீடு
தாய்நாட்டு பண்பாடு
தடை போடுமே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
பெண் : கிளை எங்கே போனாலும்
என் வேர்கள் இங்கேதான்
என் ஜீவன் இங்கும் அங்கும்
விளையாடுமே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பெண் : பொன் மாலை தந்தவனை
எந்நாளும் காதலிப்பேன்
வெண்மேகம் சிறகு தந்தால்
விண்ணோடு வலம் வருவேன்
பெண் : எந்தன் உயிர் மலரை
உந்தன் திருவடியில் தந்து
உனக்குள் கரைந்து
இந்த உலகத்தை மறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
ஓ ஹோ ஓ
பொங்குதே கண்ணீரும் சிந்துதே
ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று
பெண் : தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுரூதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
ஓ ஹோ ஓ…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
விசில் : …………………..