Author Topic: நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் ..!!! 😊❤️😊  (Read 967 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227358
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்துக்கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் தனக்கான பிரச்சனை தான் உலகத்திலேயே பெரியது என்று நினைத்து, 'இதுபோல் துன்பம் என் எதிரிக்கும் வரக்கூடாது' என சொல்வதை கேட்டிருப்போம். ஏன் நாமே கூட ஏதாவது ஒரு கட்டத்தில் அவ்வாறு சொல்லியிருப்போம்.

அது தான் நிஜமும் கூட ..!
என்னடா இப்படி சொல்லுறேன்னு பார்க்கறீங்களா?
கீழே இருக்கும் ஒரு சிறிய கல்லை எடுத்து கண்களுக்கு மிக அருகில் வைத்துப்பாருங்கள். அந்த கல் மட்டும் தான் உங்கள் கண்களுக்கு தெரியும். அதுவும் மிகவும் பெரிதாக தெரியும்.
சரி இதற்கு மாற்று இல்லையா ? சிறிய கல்லானது சிறிதாகவே தெரியாதா ?

கண்டிப்பாக சிறிதாக மட்டும் இல்லை கண்ணுக்கே தெரியாமல் மறைந்தும் கூட போக செய்யும் சக்தி நம் கைகளில்தான் உள்ளது.
அந்த கல்லை சற்றே தள்ளி வைத்துப்பாருங்கள் சிறிய கல்லாக தான் நமக்கு காட்சியளிக்கும். அதை தூக்கி தூர எறியுங்கள்... நமது கண்களை விட்டே தூரமாக மறைந்தே போய்விடும்.

நமக்கான பிரச்சனைகளும் அவ்வாறே தான்..!

பிரச்சனையை சற்றே தள்ளி நின்று பார்த்தால் அதன் உண்மை தன்மை நமக்கு விளங்கும். பிரச்சனையை மனதை விட்டு விலக்கி நம் மனதை வேறு பணியில் ஈடுபடுத்தினால் அந்த பிரச்சனையானது ஒன்றுமே இல்லாமல் மறைந்தே போய்விடும்...!!!

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் ..!!! 😊