Author Topic: சூரியனைத் தேடி !  (Read 927 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1937
  • Total likes: 6033
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
சூரியனைத் தேடி !
« on: May 26, 2025, 03:05:54 PM »

சூரியனைத் தேடி !

அடேய் ப்ளடி ராஸ்கோல், 
சூரியன்,
எங்கடா போய் தொலைஞ்ச? 

போன வருஷம், 
நீ வெயில கொளுத்தி, 
அதுக்கு நாங்க வெந்து, 
"அய்யோ"ன்னு கத்தினோம். 
உண்மைதான், அதுக்காக 
நீ மூஞ்ச தூக்கி வெச்சிக்குன்னு, 
மேகத்துக்குள்ள போய், 
ஒளிஞ்சிகிட்டா நியாயமா? 

இப்போ மழை கொட்டுது, 
பேய் மாதிரி, 
காத்து வீசுது பலமா. 
ஒரே நசநசன்னு இருக்கு. 
எது தொட்டாலும், 
சில்லுன்னு இருக்கு. 
கடுப்பா இருக்கு, 
உடம்பு பிரிஸ்காவே இல்லை. 

ஏசி வாங்க காசு சேர்த்து வெச்சேன், 
நீயும் இல்லாம அது டம்மி ஆயிடுச்சு! 

டிரஸ் எல்லாம் நெனஞ்சு, 
வழவழன்னு இருக்கு. 
கோல்ட் வேற புடிச்சு, 
தும்மி தும்மி, 
மூக்கு வேற ஒழுகுது. 
பசி எடுக்க மாட்டேங்குது. 
எந்நேரமும் இழுத்து, 
போத்திக்கணும்னே இருக்கு. 
என்னடா இது, சூர்யா? 

சீக்கிரமா வாடா, 
சித்திரை மாசம் அதுவுமா, 
இப்படி பண்ணா எப்படி? 
அக்னி நட்சத்திரத்துக்கான, 
மரியாதையே போச்சு உன்னால. 
ஒழுங்கு மரியாதையா, 
சீக்கிரம் வந்து சேரு !


Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1465
  • Total likes: 3160
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: சூரியனைத் தேடி !
« Reply #1 on: May 26, 2025, 03:24:05 PM »
மாப்பி சூரியன் மனு போட்டுருக்காரு ,
வந்தாலும் ஏசுராங்க வரலானாலும் ஏசுராங்கனு ,
இந்த மனுஷ பயலுகளே புரிஞ்சுக்க முடிலனு 😂😂😂

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1276
  • Total likes: 4400
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: சூரியனைத் தேடி !
« Reply #2 on: May 26, 2025, 06:40:15 PM »
மச்சி சூரியனை பாக்கணுமா
எங்க ஊருக்கு வாங்க

சூரியனின் வெயில்ல
உச்சி மண்டை பிளக்கணுமா
எங்க ஊருக்கு வாங்க

சூரியனின் வெயிலில்
சுருண்டு விழும் வயோதிகர்களை பாக்கணுமா
எங்க ஊருக்கு வாங்க

சூரியனின் வெயிலால்
அமோகமாய் நடக்கும்
ஜூஸ் வியாபாரம் பாக்கணுமா
எங்க ஊருக்கு வாங்க


வரும்போது கொஞ்சம்
எனர்ஜி ட்ரிங்க் கலக்கி
எடுத்திட்டு வாங்க
சூரியனை பாக்க எங்க ஊருக்கு வாங்க  ;D ;D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1937
  • Total likes: 6033
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: சூரியனைத் தேடி !
« Reply #3 on: May 27, 2025, 04:56:05 PM »
ஹா ஹா ஹா 😂🤣வேதநிஷா மாப்பி,
சூரியனையே புலம்ப வெச்சிட்டோம் பார்த்தீங்களா.
அதாம்லே வர்கீசுசுசு 😎

ஜோக்கர் மச்சி, 🤩
உங்க ஊருக்கு வரேன் !
உச்சி மண்டையப் பொளக்குற வெயில உணரனும், எனர்ஜி ட்ரிங்க்-ஓட சூரியனையும் உங்களையும் பாக்க வரேன்😉