Author Topic: பெற்றோர்கள் !  (Read 978 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1937
  • Total likes: 6033
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
பெற்றோர்கள் !
« on: May 22, 2025, 04:45:05 PM »
பெற்றோர்கள் !

அவர்கள்
இருக்கும் போதே பாராட்டாமல்
போன பின்னே கண்ணீரில் மூழ்குவோம்.
இன்று நம்மைப் பார்த்த சிரித்த முகம்
மௌனம் காத்து நாளை மறைந்து விடும்.

அவர்களை
தூங்கும் ஓர் பூத உடலாய்
வைத்து கொண்டு
மலர் தூவி “ரொம்ப நல்லவங்க”
என்று சொல்லி
கண்ணீர் கலந்து காலம் கழிப்போம்

அதற்குள்
நாம் செய்ய வேண்டியது
என்னவென்றால்
அவர்களிடம்
புன்னகையை பகிர்ந்து
நன்றிகளை மொழிந்து,
சிறுசிறு உதவிகள் செய்து
நிம்மதியாக பார்த்துக்கொண்டால்
அவர்களின் மனதில் என்றும்
நாம் நிலைத்து நிற்போம்.

அவர்கள்
போகும் முன்னே
உணர்ந்து வாழ்வோம்,
அன்பும் மரியாதையும் கொடுப்போம்.
சிலர் நம் வாழ்க்கையின் என்றும்
மறையா நன்றியின் தீப ஒளி.

அவர்கள்
நமக்குக் தரும் ஆசிகள்
நம் பாதையை மலர்களாக்கும்.

அவர்களுக்கு
நாம் உள்ளம் உருகி
அளிக்கும் அன்பும் மரியாதையும்,
நம் வாழ்வில் வளமும் அமைதியும்
வந்து சேர வழிவகுக்கும்.

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1465
  • Total likes: 3160
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: பெற்றோர்கள் !
« Reply #1 on: May 23, 2025, 07:47:13 AM »
உண்மை மாப்பி 😇

இப்பிறவியின் பயன் அடையப்
பெற்றோர்களின் சேவையை மதித்து
 நம் கடமையைச்  செய்தலே போதுமானது

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1276
  • Total likes: 4400
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: பெற்றோர்கள் !
« Reply #2 on: May 23, 2025, 12:15:57 PM »
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை விட
இருக்கும்போதே உறவின் மதிப்பு அறிந்து
கொண்டாட வேண்டும்

அருமையான பதிவு மச்சி  :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1937
  • Total likes: 6033
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: பெற்றோர்கள் !
« Reply #3 on: May 23, 2025, 12:25:04 PM »
நன்றி ஜோக்கர் மச்சி 🤩