நண்டு - அரை கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 3
வற்றல் மிளகாய் - 5
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
தேங்காய் - 2
பச்சை மிளகாய் - 7
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலைக் கிள்ளி அதன் விதைகளை நீக்கி விடவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில் இட்டு மூன்று முறை பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
வதக்கிய பிறகு சிறிது தண்ணீர், அரைத்த பச்சை மிளகாய் விழுது, துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
உருளைக்கிழங்கு அரைவேக்காடாக வெந்ததும் நண்டை சேர்த்து மூடிப் போட்டு வேக வைக்கவும்.
நண்டு வெந்ததும் இரண்டு முறை பிழிந்து எடுத்த தேங்காய் பாலை சேர்த்து மூடி வைத்துக் கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் மீதமுள்ள தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.