Author Topic: அவள் !  (Read 951 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1281
  • Total likes: 4426
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அவள் !
« on: May 16, 2025, 07:36:20 PM »
வண்ண வண்ண
நிறங்கள் கொண்ட
மலர்கள் அலங்கரித்த
அழகான பூஞ்சோலை
அதில் நடந்து வந்தாள்
காதல் சின்னமாய்
அவள்

மஞ்சள் நிற தேனீகள் பாடும் போது
மரபுகள் மறக்கும் அந்த இசை
அவளின் புன்னகை

அவள் கால் கொலுசின் ஓசை
அழகிய தோட்டத்தின் நடுவே
புதியதோர் இசையை மீட்டுகிறது
என் இதயத்தில்

இதழ்களில் பூக்கள் பூக்குமா?” என்று
என் மனது கேள்வி கேட்க
அசைவின்றி விழிகள் பதிலளித்தன

மண்ணில் விழும்
மழையின் முதல் துளி போல
காதல் துளிர்த்தது

அந்த பூஞ்சோலையில்
பூத்திருக்கும்
ஒவ்வொரு பூக்களும் அசைவது,
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
காதல் கதைகள் சொல்வதாய்
தோன்றுகிறது

மெல்ல மறைந்தாள்
என் கண்களின்
பார்வையிலிருந்து

இதோ
அடுத்த நாளும்
எல்லா பூக்களும்
பூத்து காத்திருக்கிறது போலும்
என்னை போல

வருவாளோ
அவள் !?


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "