பெரிய நண்டு - அரை கிலோ
குட மிளகாய் - கால் கிலோ
வேர்க்கடலை - கால் கப்
பொட்டுக்கடலை - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி பருப்பு - 6
எண்ணெய் - கால் கப்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 தேக்கரண்டி
நண்டை ஓட்டை எடுத்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.
தேங்காய், வேர்க்கடலை, கசகசா, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை இவற்றை மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
குடமிளகாயை விதை நீக்கி 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வதங்கியதும் அதில் நண்டை சேர்த்து மறுபடியும் வதக்கவும்.
நண்டு இலேசாக சிவந்ததும் கரைத்து வைத்தக் கலவையை ஊற்றி உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கி கொத்தமல்லித் தூவவும்.