Author Topic: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !  (Read 1148 times)

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1467
  • Total likes: 3170
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

அந்த காற்றில் வரும்
 மூங்கில் வாசம்
இந்த நிலத்தில் எழும்
மண்ணின் வாசம்
காலையில்
கண் சிமிட்டிடும் சூரியன்
மாலையில்
மயங்க வைக்கும் சந்திரன்

இரவின் ராணிகளான
நட்சத்திரங்கள்
விண்வெளியை வியப்பூட்டும்
விறு விறு விண்மீன்கள்

மனதோடு கவிப்பேசும் மலை குன்றுகள்
சாலையோர  பூஞ்சோலை போல் மரக்கன்றுகள்

என அனைத்தும் அனைவருக்கும்
 பொதுவாய் இருப்பின்
அவற்றை படைத்தவன் மட்டும்
எப்படி வேறுபடுவான்

படைத்தவன் ஒருவனே
புரிந்து கொள் மனமே ♥️
« Last Edit: May 16, 2025, 07:37:24 AM by Vethanisha »

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
« Reply #1 on: May 15, 2025, 03:47:36 PM »
Arumai thozhi💐💐💐👏👏👏


Intha thalaippil nan yaethenum ithil kirukalama?
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1467
  • Total likes: 3170
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
« Reply #2 on: May 15, 2025, 04:44:47 PM »
kandipaga  thozha

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1940
  • Total likes: 6041
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
« Reply #3 on: May 15, 2025, 05:58:43 PM »
வேதனிஷா மாப்பி கவிதை அருமை !
 
மனம் என்பது உணர்ச்சியால் நம்மை ஒன்றிணைக்க முயற்சி செய்யும் கருணை அன்பு ஒருமைப்பாடு போன்றவற்றை நம்முள் ஏற்படுத்தும். ஆனால் புத்தி மனிதனின் பகுத்தறிவையும் மறைத்து வேற்றுமை காணவே முயற்சி செய்யும் நான் பெரியவன்,நீ சிறியவன் என்றும், நான் என்றும், பிறர் என்றும் பிரிக்கும்.

மனமும் புத்தியும் இணைந்து செயல்படும் வரை படைத்தவன் ஒருவனே என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கும்.

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 331
  • Total likes: 1369
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
« Reply #4 on: May 16, 2025, 07:50:02 AM »
அழகான வரிகள். ஆழமான கருத்து அன்பே💜💜

Offline SweeTie

Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
« Reply #5 on: May 16, 2025, 07:36:42 PM »
அழகான இயற்கை.   அழகான கவிதை

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1277
  • Total likes: 4408
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
« Reply #6 on: May 17, 2025, 01:40:55 PM »
பாரதி போல வார்த்தைகள் சொல்லும்
புதுமை பெண்ணின் வார்த்தைகளில்
உரக்க சொன்னீர்கள்
படைத்தவன் ஒருவனே


வாழ்த்துக்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "