Author Topic: தோழியை தேடி  (Read 1372 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
தோழியை தேடி
« on: May 13, 2025, 01:03:58 PM »
கண் காணும் நிலவின்
களம் காண கலனை
எய்தோரும் மண்ணில்
இருந்தார்போல் நானோ
களம் ஒன்றில் கண்டு
கவி நேசம் கொண்டு
கருத்தால் பூச்செண்டு
கரத்திலே தந்து
கருத்தாழ மிக்க
கவிதைகள் புனைய
எழுத்தாலே என்னை
ஏற்றிய பெண்ணை
தப்பேதும் இன்றி
நட்போடு அண்டி
கண்களால் கண்டு
கவிதையால் வாழ்த்தி
நட்போடு நாளும்
நடைபோடத்தானே
இந்நாளில் இனிதாய்
ஒரு சபதம் ஏற்றி - நீ
எங்கிருந்தாலும் வருவேனே போற்றி





intha post sutathu ila en manasai thottathu..... bean