நடுத்தரமான நண்டு - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
அரிசி மாவு - கால் கப்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
மஞ்சள் தூள் - தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த நண்டில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், எலுமிச்சை சாறு, உப்பு, அரிசி மாவு சேர்த்து பிசறி அரை மணிநேரம் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஊற வைத்த நண்டுகளை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த நண்டை ஒரு தட்டில் கொட்டி கரம் மசாலா பொடியை தூவவும்.