Author Topic: முதல் நண்பி – அம்மா✨  (Read 997 times)

Offline Lakshya

முதல் நண்பி – அம்மா✨
« on: May 11, 2025, 07:42:23 PM »
முதல் நண்பி – அம்மா❤️

கருப்பை ஓர் கோயிலாகக் கொண்டு,
உயிர் ஒன்றை பெற்றெடுத்தாள்...
வயிற்றில் சில தழும்புகள்,ஒவ்வொன்றும் ஒரு போர் வென்றதின் அடையாளம்....

அவள் சிரிப்பில் இருக்கிறது கோடி ஜென்ம ஆசிர்வாதம்...
வாடும் பூவினில் வாசம் தேடி நான் அலையும்போது,
வாசமாய் வந்து என் கைகளில் நின்றவள்...
சின்ன தவறுகளை கூட
பாடமாய் கற்று கொடுத்தாய்...

இப்போதும் நான் விழும்போது ஓர் கை தேடுகிறேன்...

அந்த கை நீ மட்டுமே அம்மா!!!

Offline Vethanisha

Re: முதல் நண்பி – அம்மா✨
« Reply #1 on: May 13, 2025, 12:37:12 PM »
விழுவதற்கு முன்பே தாங்கி பிடிக்கும் கரம் அது அல்லவோ .. super nice da🥳