Author Topic: அம்மா !  (Read 688 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1941
  • Total likes: 6049
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
அம்மா !
« on: May 11, 2025, 12:35:28 PM »

அம்மா !

அம்மா ஒரு சொல்லா?
இல்லை
அது ஒரு உலகம்.

அம்மா என்றாலே அன்பு,
அம்மா என்றாலே நம்பிக்கை,
அம்மா என்றாலே நிழல்,
அம்மா என்றாலே நேசம்.

அம்மா சிரிக்கிறாள் 
என் உலகம் ஒளிக்கிறது,
அம்மா அழுகிறாள்
என் மனம் சுருங்குகிறது,
அம்மா வருகிறாள்
என் சுமைகள் எல்லாம் மறைகிறது,
அம்மா பேசுகிறாள்
என் அமைதி பூக்கிறது.

அம்மா என்று அழைக்கும் போது
என் சுவாசம் சீராகிறது,
அம்மா என்னை அணைக்கும் போது
என் வலிகள் மறைகிறது,
அம்மாவை தேடும்போது
என் பாதை தெளிவாகிறது,
அம்மா என்னோடு பேசும் போது 
என் பயம் பறக்கிறது.

அம்மா ஒரு பாட்டு
மனதை தொட்டுப் போகும்,
அம்மா ஒரு கதை
எப்போதும் புதிதாய் தோன்றும்,
அம்மா ஒரு தூய நீர்
மனதில் அருவியாக ஓடும்,
அம்மா ஒரு தீபம்
இருளில் ஒளி கொடுக்கும்.

அம்மா
என் உயிரின் முதல் இசை,
என் வாழ்வின் எல்லையற்ற வழி,
என் இதயத்தின் கீதம்,
என் வாழ்வில் என்றும் மறையாத
சொல் "அம்மா"

அனைவருக்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள் !