Author Topic: ✨வணிகமயம்💵  (Read 581 times)

Offline Yazhini

✨வணிகமயம்💵
« on: May 10, 2025, 02:09:45 PM »



வணிகமயம்


அனைத்தும் இன்று வணிகமயம்.
அன்பும் வணிகமயமாகி விட்டது.

தன்னுள் மறைத்(ந்)த உண்மைமுகங்களும்
வணிகமய அன்பில் ஒளிர்கின்றது.

தன்னுள் அடக்கிய குழந்தைதனமும்
அழகாக தோகை விரிக்கின்றது.

நிதர்சனத்தில் நீள்முகமும் மூடியவாயும்
அடங்காவாயுடன் மலர்ந்து கொண்டிருக்கிறது.

கண்களில் அடக்கிய கண்ணீரும்
இங்கு சிரித்து சிதறுகின்றது.

முகமறியா முகங்களின் முகவரியால்
திறமைகளும் கதவைத் திறக்கின்றது.

சிலரில் அடக்கிய மிருகமும் தன்
கோரத்தாண்டவத்தைக் காட்டத்தான் செய்கின்றது.

இருப்பினும் வணிகமயம் ஆக்கப்பட்ட
அன்பிலும் அன்பு மிளிர்கின்றது😌


« Last Edit: September 08, 2025, 06:51:08 AM by Yazhini »

Offline Lakshya

Re: ✨வணிகமயம்💵
« Reply #1 on: May 10, 2025, 06:26:51 PM »
Nice one da❤️