Author Topic: அன்னையர்தின வாழ்த்துக்கள்  (Read 2084 times)

Offline SweeTie

பத்து திங்கள் சுமந்து
பத்தியமும்  நீ காத்து
பக்கவாட்டில்  படுத்தா
பிள்ளை உடல் நோகுமென 
படுக்கையிலும்  கஷ்டம்
இருக்கையிலும்  கஷ்டம்
இதையெல்லாம்  கடந்து
இடுப்புவலி வரும்வேளை
இன்முகம்காட்டி என்னை ஈன்றாயே!

பசியறிந்து பாலூட்டி சீராட்டி
பக்குவமாய்  வளர்த்து
பள்ளி  செல்லவைத்ததும் நீதானே
ஈன்றபோது  பெற்ற  இன்பத்தை
இருமடங்காய் பெற்றாய் நான்
சான்றோன்  என கேட்டபோது என்றாயே
திரை கடலோடி  திரவியம் தேட
உன்னை பிரிந்து வந்தேனே அம்மா
இன்று என் நினைவால் 
உன்னை  வருடுகிறேன்  தாயே!
அடுத்த பிறவி இருக்குமானால் நீயே
 என் தாயாகவேண்டும் அம்மா!!

அனைத்து அன்னையருக்கும்  அன்னையர்தின வாழ்த்துக்கள்
 

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1042
  • Total likes: 1836
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
தாயின் அன்பை இவ்வளவு உணர்வுடன் கவிதையாக எழுதிய விதம் மனதை நெகிழச்செய்கிறது...Nice sis❤️

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 233
  • Total likes: 560
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
மிக அருமையான கவிதை 🌹🌹.
நிச்சயம் தாய்க்கு நிகர் தாய் மட்டுமே.

உன் தாய் உன்னை சிரமத்துடனே பெற்றெடுத்தாள், சிரமத்துடனே வளர்த்தேடுத்தாள் அவளை "சீ" என்று கூட சொல்லிவிடாதே.. ( Al quran )..