Author Topic: மழைத்துளிகள்!  (Read 23 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1029
  • Total likes: 3401
  • Total likes: 3401
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மழைத்துளிகள்!
« on: May 08, 2025, 07:48:19 PM »


ஒரு அழகான மாலை வேலை
ஜன்னலருகில் அமர்ந்திருக்க
வானில் இருந்து என் ஜன்னலருகில்
விழுந்து துள்ளி குதிக்கும்
மழைத்துளிகள்
அவள்  பேரை உச்சரிப்பது போல
உணர்கிறேன்

நீங்களும்
காது கொடுத்து கேட்டிருக்கிறீர்களா
அம் மழைத்துளிகள்
உச்சரிக்கும் பெயர்
யாருடையது என்று

அவை
கடற்கரை ஓரம்
கடல் அலைகளோடு
நான் சொன்ன
நினைவுகளை
அவை மேகமாய் மாற்றி 

என் ஜன்னலோரத்தில்
என் காதருகில்
மழைதுளியாய்
என்னோடு சொல்கின்றனவோ
என எண்ணுகிறேன்

இவை அவளோடும்
சொல்லியிருக்க  கூடும்
அவள் அதை காது கொடுத்து
கேட்டிருப்பாளோ நானறியேன்


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

Re: மழைத்துளிகள்!
« Reply #1 on: May 08, 2025, 08:40:03 PM »

காண்பதெல்லாம்  அவள் உருவம்
கேட்பதெல்லாம்  அவள் குரலே 
என்றாகிவிட்டது போல் தெரிகிறதே வாழ்த்துக்கள்