பிறை நெற்றி சூடும் பொட்டாகி
விழி இரண்டில் மலரும் மொட்டாகி
செவி நுழைந்து கவரும் மெட்டாகி
உவகையுடன் உடுத்தும் பட்டாகி
உன் கூந்தல் கலைக்கும் காற்றாகி
நீ உண்ணும் உணவின் நாற்றாகி
கரிசனத்தில் கனிவின் ஊற்றாகி
மனம் மயக்க உந்தன் மாற்றாகி
உன் உலகம் சுற்றும் வானாகி
உன் கரத்தை பற்றும் ஆணாகி
நீ கொள்ளும் காதல் தானாகி
உனக்கெல்லாம் இங்கே நானாகி
என் காலம் கடத்திடவே தோன்றும்
இக்கனவும் மெய்ப்படவே வேண்டும்.