Author Topic: 📝திருத்தம் தேவை ✨  (Read 640 times)

Offline Yazhini

📝திருத்தம் தேவை ✨
« on: May 08, 2025, 08:21:14 AM »



சிறு திருத்தம் தேவை.
கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளில்
சிறு திருத்தம் தேவை.

அன்பு ஒன்றே பிரதானம்
என்று எண்ணிய எண்ணத்தில்
சிறு திருத்தம் தேவை.

தேன்சொட்ட பேசிய பேச்சுகளெல்லாம்
உண்மை என்ற நம்பிக்கையில்
சிறு திருத்தம் தேவை.

தேவைக்கு மட்டும் பழகும்
பந்தங்கள் மீதுள்ள பாசத்தில்
சிறு திருத்தம் தேவை.

நட்பாக பழகி நம்மைப்பற்றி
புறம்பேசும் நபர்களைக் கண்டறிவதில்
சிறு திருத்தம் தேவை.

துன்ப வேளையில் திண்டாடும்
மன அமைதியின் வேட்கையில்
சிறு திருத்தம் தேவை.

திருத்த இயலாத வாழ்க்கைப்பகுதியைக்
கையாளும் மன திடத்தில்
சிறு திருத்தம் தேவை.

திருந்தா மனதின் சிந்தனைகளில்
கைதியாகாமல் தப்பி பிழைக்க
சிறு திருத்தம் தான் தேவை.


« Last Edit: September 08, 2025, 06:51:38 AM by Yazhini »

Offline Vethanisha

Re: 📝திருத்தம் தேவை ✨
« Reply #1 on: May 08, 2025, 06:04:56 PM »
திருத்த இயலாத வாழ்க்கைப்பகுதியைக்
கையாளும் மன திடத்தில்
சிறு திருத்தம் தேவை.

So nice da anbe ❤️

Offline SweeTie

Re: 📝திருத்தம் தேவை ✨
« Reply #2 on: May 08, 2025, 08:46:16 PM »
திருத்தங்களை அவரவர்தான்  ஏற்படுத்தவேண்டும்.