போதும் என்ற மனம்
திமிங்கலம் பெரியது,
அது நீந்த
சமுத்திரம் தேவைப்படும்.
தங்க மீன்கள் சிறியது,
அது நீந்த
மீன் தொட்டி போதுமானது.
சமுத்திரம் கிடைத்தால்
திமிங்கலம் போல பெரிதாய் இரு.
மீன் தொட்டி கிடைத்தால்
தங்க மீன்களை போலச் சாந்தமாய் இரு.
எது வந்தாலும்
போதும் என்று நினைத்தால்
வாழ்க்கை இனிமைதான்.
போதாது என்றால்
எதுவும் போதாது !