Author Topic: வெள்ளை மனம் !  (Read 405 times)

Offline சாக்ரடீஸ்

வெள்ளை மனம் !
« on: May 07, 2025, 01:22:36 PM »

வெள்ளை மனம்

வெள்ளை காகிதம் போல,
வெள்ளை மனதும்
எது முன், எது பின்
என்று அறியாது.

எதை நாம்
முதலில் யோசிக்கின்றோமோ,
அதுவே உணர்ச்சியின்
முதல் பக்கம் ஆகிறது.

வெள்ளை மனத்தில்
கோபம் எழுதினால்
அது தான் அதன் முதல் முகம்.
அதுவே
அதில் சிரிப்பை தீட்டினால்
அது தான் அதன் முதல் ஒலி.

பார்வை மாற்றினால்
பக்கம் அழகாகவும்,
மனம் மாற்றினால்
வாழ்க்கை பொலிவாகும்.