Author Topic: வாய்ப்பு எப்போதும் கையிலிருக்காது  (Read 631 times)

Offline சாக்ரடீஸ்


யோசிக்காமல்

சில நேரங்களில்
மனம் கொதிக்கும்போது
வார்த்தைகள் விழுங்காமல்
வெளியேறுகின்றன

யாராவது கேட்டுப் பார்த்தால்தான்
அது வலி கொடுத்ததா என்று தெரியும்

விழுந்த வார்த்தைகள்
பட்டென்று இதயத்தை பிளக்கும்

நாம் மறந்துவிடுகிறோம்
மனதுக்கும் ஒரு தோல் இருக்கிறது
அதை கீறுவது எளிது

பின்னால் புரிந்து கொள்ளும் போது
மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு
எப்போதும் கையிலிருக்காது



Offline Vethanisha

அதிக கோபத்திலும்
அதிக துன்பத்திலும்
அதிக மகிழ்ச்சியிலும்
நாம் பேச சிறந்த மொழி

மௌனமே😇

Offline சாக்ரடீஸ்

ஆமா வேதநிஷா மாப்பி🍀

மௌனம் சொல்லும் உண்மையை,
எந்த சொற்களும் இதுவரை சொல்லவில்லை.

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1162
  • Total likes: 3946
  • Total likes: 3946
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உதிர்த்த சொல்லுக்கும்
உதிர்ந்த பூவுக்கும் வாழ்வு ஒன்று தான்

உதிர்க்காத  சொல்லுக்கு
அர்த்தங்கள் நூறு

சில நேரம் மௌனம்
காயப்படுத்தும்
சில நேரம்
காயம் ஆற்றும்

சில நேரம்
மௌனமாய் இருப்பதை விட
மன்னிப்பு என்ற ஒற்றை சொல்
போதுமாகிறது

சில நேரம்
மௌனமாய் இருந்திருந்தால்
மன்னிப்பு கேட்க வேண்டிய
அவசியம் இருந்திருக்காது


என்ன சொல்ல வரேன்னா ........ :) :D :)
 :D :D




"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

ஜோக்கர் மச்சி
புரிஞ்சு போச்சு 🤣🤣

மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில் மன்னிப்பு கேக்கணும்
மௌனமாய் இருக்க வேண்டிய இடத்துல மௌனமா இருக்கணும்.