Author Topic: ✨✨✨யாழினி - இன் கிறுக்கல்கள்✨✨✨  (Read 1230 times)

Offline Yazhini

       

நெடுநாள் வினா... விடையறியா வினா..
காற்றுக்கூட கேட்டுவிட்டு போகும்
எங்கே அவனென்று???- அதனிடம்
எப்படி கூறுவேன் மூச்சில்கலந்து
கண்ணீரில் கரைபவனைப் பற்றி...
« Last Edit: April 29, 2025, 09:23:31 PM by Yazhini »

Offline Yazhini


கரைகளைத் தொட்டுச்செல்லும் அலை போல
திரைகளை அகற்றாமல் இருக்கும் நினைவலைகள்.
உரையாடல் அற்றுபோன அறையும் கூறும்
திறவாத உள்ளத்தின் கூக்குரலை...
« Last Edit: September 08, 2025, 06:49:19 AM by Yazhini »

Offline Yazhini

                             

திறவாத உள்ளத்தின் கதவுகளையும்
தகர்தெறியும் மழலை செல்வம்.
மொழி அற்ற நிலையிலும்
அல்லி விரல் பேசும்.
வாழும் வாழ்வின் அர்த்தம்
இறைக் காட்டிய இரக்கம்.
தொலைந்துபோகாத நினைவுகளின் பெட்டகம்
காரிருளில் வழிநடத்தும் வெளிச்சம்💜💜💜
« Last Edit: April 30, 2025, 05:51:07 PM by Yazhini »

Offline Yazhini

                       

மழலையின் வெளிச்சம்🔥
பிறக்கையில் கங்கு.
கொஞ்சல்மொழியில்  அகல்.
சிரிக்கையில் மின்னல்.
மணகசப்பின் காட்டுத்தீ.
கையிலடங்கும் நிலவொளி.
எதிர்காலத்தின் சூரியன்
தடுமாறுகையில் சுடர்விளக்கு
குணத்தில் சோதி
மிரட்சியில் பிரகாசம்
« Last Edit: May 06, 2025, 06:28:23 AM by Yazhini »

Offline Vethanisha

அருமை அன்பே ❤️
கவிதை ரசிப்பவர்க்கு அருளொளி❤️

Offline Yazhini




மிரட்சியில் மனமும் ஒடுங்கி கிடக்க
மீண்டும் எழ முற்படுகையில் வீழ்கின்றது.
பிஞ்சு விரல்களின் கதகதப்பில் உள்ளமும்
வாழும் அர்த்தங்களை நாடி அலைகின்றது.

பந்த பாசங்களின் பொய் பூச்சுகளும்
இன்னல் வேளையில் கலைந்துதான் போனது.
இறை உனையே கதி என்றேனே
நீயும் கைவிட வேறெங்கே செல்வேன்.

இருந்து என்னபலன் இறந்துதான் போவேனோ.
இறந்து என்னபயன் இருந்து வாழ்வேனோ.
விரக்தியின் விளிம்பிலும் வீழாமல் இருப்பேனோ
பலமுறை வீழ்ந்தாலும் மீண்டும் எழுவேனோ...
« Last Edit: September 08, 2025, 06:49:40 AM by Yazhini »

Offline Yazhini



மீண்டும் எழுவாய் மீண்டு எழுவாய்
விடாமை எனும் சொல்லில் எழுவாய்
மனமே! புதியதொரு விடியலைக் காணுவாய்.

மீண்டு எழுகையில் பிழைகளும் அழகு.
திருத்தங்களும் திருப்பங்களும் தன்னகத்தே உண்டு
என்பதை நன்கு துய்த்து உணர்வாய்.

இன்பதுன்பம் இரவுபகல் போல தான்.
இன்பம் மனதைக் குளிர செய்கிறது.
துன்பம் மனதிற்கு உறுதியை ஊட்டுகிறது.

இனிமையான சாரலாய் இன்பமும்,
அடைமழையாய் துன்பமும் வந்தமையிலும்
இரண்டினையும் புசித்து இரசிப்பாய்.

தோல்வி என்பது விழுந்தமையில் அல்ல.
மீண்டும் மீண்டு எழாமையில் என்பதறிவாய்.
விழவிழ  மீண்டெழு! வீறுநடை பழகு!

மென்மையான தென்றலும் அழுத்தத்தில் புயலாகும்.
அழுத்தம் - நம் வலிமையை
உணர செய்யும் ஆயுதம்.

நிலத்தின் அழுத்தத்தைத் தாங்கும் மரமே
காலப்போக்கில் வைரமாக பிரகாசிக்கும்.
அழுத்தம் தாங்கும் உள்ளமும் வைரமே!

கடும்பணியும் கதிரவன் முன் நிற்பதில்லை.
இந்த நொடியே கடைசியென்று ஏதுமில்லை.
இதுவும் கடந்துபோகும், எதுவும் கடந்துபோகும்.
« Last Edit: September 08, 2025, 06:50:03 AM by Yazhini »

Offline Yazhini




கடந்துபோகும் பாதையில் விட்டுசெல்லும்
சுவடு போல - சிலரின்
வாழ்க்கை சுவடு நம்
இதயத்தில் படியத்தான் செய்கின்றது.

நம்மை வாழசெய்வதும் அதுவே
வாழ்க்கையை மாற்றுவதும் அதுவே.
சிலரின் வருகை தேவதையைப்
போல் வாழ்வை அழகாக்கும்.

சிலரின் பிரிவு அசானைப்
போல் பாடத்தை போதிக்கும்.
சிலரின் இருப்பு வாழ்வின்
அர்த்தங்களைப் புரிய வைக்கும்.

அனைவரின் வாழ்க்கையும் எளிதல்ல.
வாழ்க்கை ஓட்டத்தில் பயணிக்க
அனைத்தையும் ஏற்று கொள்
அதனை மாற்றவும் கற்றுக்கொள்.

மாற்றம் ஒன்றே மாறாதது
என்பதை நாம் உணரும்வரை
வாழ்க்கை போதிப்பதை நிறுத்தாது.


« Last Edit: September 08, 2025, 06:50:26 AM by Yazhini »