Author Topic: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu  (Read 10919 times)

Online VenMaThI



Hi dears...

Enaku kavithai mela interest varadhuku main reason indha haikoo kavithaigal (ஹைக்கூ கவிதைகள்) than.  Romba short ah but romba meaningful ah irukum.. nerya Haiku kavithaigal enaya sindhika vachruku, sirikka vachruku... apadi na padichu rasicha sila haiku kavithaigal idhoo......
« Last Edit: March 29, 2025, 07:19:24 AM by VenMaThI »

Online VenMaThI



Thadumaarum Pozhudhu Thaangi Pidippavanum...
Thadam Maarum Pozhudhu Thatti Ketpavanumee

Unmayana NANBAN...


தடுமாறும் பொழுது தாங்கிப்பிடிப்பவனும்
தடம் மாறும் பொழுது தட்டிக்கேட்பவனுமே
உண்மையான நண்பன்...


Online VenMaThI



Karuvarai Payanathin Mudivu....

Kallarai Payanathin Thodakkam...

PRASAVAM...


கருவறைப்பயணத்தின் முடிவு....

கல்லறைப்பயணத்தின் தொடக்கம் ...

பிரசவம்....






Offline Megha

Wowwww nice Sis 😍😘

Online VenMaThI



Manaivi irandhadharkkaga
Kanavan kattiya vellai pudavai
"Tajmahal"


மனைவி இறந்ததற்காக
கணவன் கட்டிய வெள்ளைப்புடவை
"தாஜ்மஹால்"



« Last Edit: March 31, 2025, 01:45:32 PM by VenMaThI »

Online VenMaThI




Karuppu aadai anindhu
Anudaabappatadhu Bhoomi...

"Sooriyanin Maraivu"


கருப்பு ஆடை அணிந்து
அனுதாபப்பட்டது பூமி....

"சூரியனின் மறைவு"




Online VenMaThI



Vizhudhugal atra Aaalamarangal...

"Mudhiyor Illam"


விழுதுகளற்ற ஆலமரங்கள்....

"முதியோர் இல்லம்"



Offline Thooriga

Wow ma ellamey super last one sema aa

Online VenMaThI



Ulaga adhisayangal anaithayum
Otrai iravil thorkadithu vittadhe

"Pournami Nila"

உலக அதிசயங்கள் அனைத்தையும்
ஒற்றை இரவில் தோற்கடித்துவிட்டதே

"பௌர்ணமி நிலா"


Online VenMaThI



Bramannukkum maradhi undu
Enbadarku siranda udharanam

  - "Tirunangai"

பிரம்மனுக்கும் மறதி உண்டு
என்பதற்கு சிறந்த உதாரணம்

  - "திருநங்கை"

Offline mandakasayam

Yellamey superr ...

Online VenMaThI



Iravil Oli Tirudiyadhaal
Pagalil Olindhu Kolgiraal...

"NILA"


இரவில் ஒளி திருடியதால்
பகலில் ஒளிந்து கொள்கிறாள்...

"நிலா"

Online VenMaThI



Vidindhadhum
Irundu vidugiradhu
Theru vilakkin vazhkai...!!!

விடிந்ததும்
இருண்டு விடுகிறது
தெருவிளக்கின் வாழ்க்கை...!!!


Online VenMaThI


"Annayum Pithavum Munneri Deivam"
Padithukkondu irukkiradhu
Anaadhai Kuzhandhai...

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
படித்துக் கொண்டிருக்கிறது
அனாதைக்குழந்தை....


Online VenMaThI



Poova Thalaya??
Poo ketkiraal... Vidhavai...

பூவா தலையா??
பூ கேட்கிறாள்.. விதவை..