Author Topic: மணத்தக்காளி சாறை தினமும் குடித்து வந்தால் என்னவாகும் தெரியுமா?  (Read 681 times)

Offline MysteRy




நமது ஊர் பகுதிகளில் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு கீரை மணத்தக்காளி கீரையாகும். இது பல மருத்துவ குணங்களை அடக்கியுள்ளது. இன்று பலரையும் பாதிக்கக்கூடிய சில பிரச்சனைகளுக்கு இந்த மணத்தக்காளி கீரை எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பது பற்றி காணலாம்.

மணத்தக்காளி காயை, சுண்டக்காயை போல வற்றல் செய்து சாப்பிடலாம். இதனை குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இது சுவையான மருந்தாக அமைகிறது.

மணித்தக்காளி கீரையை விளக்கெண்ணையில் வதக்கி பற்று போட்டால் மூட்டு வீக்கங்கள் குணமாகும்.

விரை வாதத்திற்கு மணித்தக்காளியை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி பற்றாக உபயோகிக்கலாம். இதனை தினமும் உபயோகிப்பதால் விரை வாதம் குணமாக வாய்ப்புகள் உண்டு.

மணித்தக்காளியின் சாறை 5மிலி முதல் 10 மிலி வரை 48 நாட்கள் குடித்து வந்தால், ஈரலை பாதிக்கக்கூடிய அத்தனை நோய்களும் குணமடைந்துவிடும்.

மணித்தக்காளியின் காய்ந்த விதைகளை ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வயிற்றுப்போக்கு குணமாகும்.

மணித்தக்காளி கீரையை நன்றாக வதக்கி வாயிலே அடக்கி வைத்து, இதன் சாறை உள்ளே நன்றாக உறிஞ்சுவதால், வாய்ப்புண்கள் குணமாகும்.