Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது? - இயற்கை மருத்துவம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது? - இயற்கை மருத்துவம் (Read 353 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221523
Total likes: 27223
Total likes: 27223
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது? - இயற்கை மருத்துவம்
«
on:
March 16, 2025, 07:55:13 AM »
தற்போது பலர் தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வைத்தியங்களை நாடுகின்றனர். மேலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற முனைகின்றனர். அதில் ஒன்றாக பலரும் நினைத்து பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது. இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
பாகற்காய் ஜூஸ் :-
உங்களுக்கு சரியாக பசி எடுப்பதே இல்லையா? மற்றும் உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.
கேரட் ஜூஸ் :-
நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.
சுரைக்காய் ஜூஸ் :-
உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்.
பீட்ரூட் ஜூஸ் :-
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
அருகம்புல் ஜூஸ் :-
அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.
கற்றாழை ஜூஸ் :-
கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது? - இயற்கை மருத்துவம்