Author Topic: என் சிரிப்பு  (Read 316 times)

Online Thooriga

என் சிரிப்பு
« on: March 03, 2025, 03:08:43 PM »

ஒரு குழந்தையின் சிரிப்பு மிகவும் அழகானது...

அத்தகைய  சிரிப்பையும் வெல்ல கூடியது அழுகை...

இவ்வுலகிலே மிகவும் புனிதமானது அன்பு...

அத்தகைய அன்பின் பரிசே அழுகை ..

மனித உடலில் சிறந்த பாகம் இதயம்...

அத்தகைய இதயத்தின் வலிகளே அழுகை...

உலகை பார்ப்பதற்கு படைத்ததே கண்கள்...

அத்தகைய கண்களின் மொழியே  அழுகை ...

அழுகையின் வெளிப்பாடே கண்ணீர் துளிகள்...

அத்தகைய கண்ணீர் துளிகளை மறைகின்றது

என் சிரிப்பு ...
« Last Edit: March 04, 2025, 01:09:19 PM by Thooriga »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1029
  • Total likes: 3401
  • Total likes: 3401
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: என் சிரிப்பு
« Reply #1 on: March 04, 2025, 01:06:30 PM »
மனிதனின் எத்தகைய
கவலைகளையும்
மறக்க செய்யும் வித்தை
குழந்தைகளின்
சிரிப்புக்கு உண்டு

பெரியவர்கள் ஆனதும்
கண்ணீர் துளிகள் வற்றிய பின்
பெரும்பாலும்
அழுகையை அல்லது
வலியை மறக்க
பூக்கிறது
புன்னகை (புண்நகை)

தொடர்ந்து எழுதுங்கள்
குழந்தையின் சிரிப்பை
போல இருக்கட்டும்
உங்கள் சிரிப்பு



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "