என் காகித நண்பனே !
நான் பேசும் அனைத்திற்கும்
செவிக்கொடுக்கும் உற்ற துணையே !
உன்னுடன் உரையாடுகையில்
இன்பம் பெருகும்
துன்பம் குறையும்.
என் ரகசிய சிநேகிதனே!
உலகத்தார் அறியா பல
காயங்களைத் தாங்குபவனே !
உன்னோடு ரகசிய உறவு
மனதிற்கு அருமருந்து.
மரக்கூழிலிருந்து தரித்த
எனது வரமே ! உறவே !
பெருங்காயங்களைத் தாங்கும் நீயே
பெருங்காவியங்களைப் படைக்கின்றாய்.
பலரின் உரிய தோழனே !
வாழ்நாளின் வழிகாட்டியே !
பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
உனக்கு மாற்றாய் வந்தாலும்
தீண்டலில் மகிழ்வை தருவது நீயே !
நீ காலத்தின் தந்தை
இன்னல்களில் அன்னை
மகிழ்வின் சகோதரன்
போராட்டங்களில் போராளி
கற்பிப்பதில் ஆசான்
ஞானத்தின் இருப்பிடம்
காலங்கடந்த இறைவன்
படைப்புகளில் புனிதம்....