Author Topic: ✨தனிமை✨  (Read 509 times)

Offline Yazhini

✨தனிமை✨
« on: February 27, 2025, 07:47:16 AM »
              தனிமை

வேண்டியும் வேண்டாமலும் எனை
ஒட்டிக்கொள்ளும் இனியவனே!
உன்னுடன் நான் பேசும் ரகசியங்கள் ஆயிரம்.
யாருமறியா என்னை முழுதாய் அறிந்தவன் நீயே !
என் இனிய தனிமையே ! நீ.....
என் ரகசியங்களை அறியும் நிலவன்...
தென்றலைப் போல் தேற்றுவதில் முகிலன்...
கண்ணீரைத் தாங்கிக்கொள்வதில் கார்மேகன்...
சப்தம் நிறைந்த உலகில் என் நிசப்தன்...
உறவற்ற உலகில் என் நிழலவன்...
என்னை எனக்கு அறிமுகம் செய்வதில் பகலவன்...
சிந்தனையைச் சீர்படுத்துவதில் அறிவழகன்...
எனை என்றும் நீங்கா என்னவன்...

         
« Last Edit: February 27, 2025, 07:49:42 AM by Yazhini »