Author Topic: 🔥 அக்னிப்பெண்ணே🔥  (Read 879 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 323
  • Total likes: 1316
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
🔥 அக்னிப்பெண்ணே🔥
« on: February 12, 2025, 02:28:36 PM »
  🔥 அக்னிப்பெண்ணே🔥

அக்னிசுவாலைப் போல் இரு பெண்ணே!
சூழ்நிலை எதுவாகினும் மேல்நோக்கி எறி.
தன்னிடம் சேரும் எதனாலும் மாசுபடாமல் இரு
இருளை அழித்து ஒளியைக் கொணர்.
தீயது உன்னை நெருங்க அஞ்சட்டும்
அனைத்து ஆற்றலுக்கும்
முதன்மை ஆற்றலாக இரு.

ஆக்கமும் நீயே! அழிப்பதும் நீயே!
சமூகத்தைக் காப்பதில் தீபமாக இரு.
தீயவையை அழிப்பதில் காட்டுத்தீ போல் இரு.
உன்னுள் அடங்கிய ஆற்றலைப் பேண்.
சிறுக்கூட்டினுள் அடங்காமல்
ஆகாயத்தில் ஆதவன் போல் இரு.
வருபவை வரட்டும் என்று
நெஞ்சுரம் கொள் அக்னிப்பெண்ணே!
« Last Edit: February 12, 2025, 08:20:34 PM by Yazhini »