« on: April 15, 2012, 12:19:38 AM »
முண்டாசு கவிஞனின் பெயர் கொண்டதனால்
ஆசைக்கு உண்டான ஆசை இதுவோ ?
உலகில் இதுவரை பாடப்பட்ட
" பா "க்களுக்கெல்லாம் விட அழகிலும் இனிமையிலும் " ரதி "யாய்
விளங்கும் சிறப்பினால் வந்த ஆசை இதுவோ 
எது எப்படியோ ,
பொன் வேண்டவில்லை நான் ,
பொருளும் வேண்டவில்லை
மண் வேண்டவில்லை நான்
உன் மனமும் வேண்டவில்லை
பொன்னை விட பொன்னான உன் ஒரு
பதிப்பை தான் வேண்டினேன் ....
என் வேண்டுகோள் இன்னும் ஏற்க்கபடாமலே !
« Last Edit: April 15, 2012, 09:24:57 AM by aasaiajiith »

Logged