Author Topic: 💗அப்பாவின் கடிதம்💗  (Read 92 times)

Online Asthika

💗அப்பாவின் கடிதம்💗
« on: January 20, 2025, 12:09:08 PM »
மகள் இருந்ந வீடு💫💫
      மகளே நீ பிறந்து வளர்ந்ந வீடு
       இப்போதும் முழுக்க முழுக்க
      உன்னுடையதாக இருக்கிறது
       அம்மாவுடையதும் என்னுடையதுமான
       பொருள்கள் அனைத்தும்...
       பெருகி கிடக்கும் உனது பொருள்களுக்கு
        அஞ்சி ஆங்காங்கே
        ஓரங்களில் கிடக்கின்றன
         
        பிந்தைய உனது பருவக்காலப்
         பொருள்களாலும் புத்தகங்களாலும்
         மட்டுமின்றி முந்தைய உனது பால்ய கால
          பொருட்களாலும் நீ இந்த வீட்டை
           ஆக்கிரமித்திருக்கிறாய்...
           உனது அத்தனைத் தோழிகளும்
           உன் வீடென்றே ஊராருக்கு
          அடையாளப் படுத்தியுள்ளனர்
            நீ இந்த வீட்டில்
          வாழ்ந்த காலத்தில்  வீட்டுக்கு வா என்று
           வாஞ்சையோடு  அழைப்பாய்
           
   ‌.         உன் பொருட்டு
             ஒலித்து அடங்கிய 
              கெட்டி  மேளத்திற்கு பிறகு
             
            மாமியார் வீட்டில் இருந்து
     ‌‌.       இப்ப எங்க அம்மா வீட்டிற்கு
             வந்திருக்கிறேன் என்று யாரிடமோ
             சொல்லிக் கொண்டிருக்கிறாய்
‌.            ❤️ உனக்கென்று ஒரு வீடற்றவளாக❣️/b]
.
             
           
             
« Last Edit: January 21, 2025, 10:35:07 AM by MysteRy »