பழுதின்றி கொண்ட காதல்
பிழையென்று உனக்கு தோன்ற
விடைபெற்று சென்ற உன்னால்
சிறைப்பட்டு போனேன் நானும்
மிதமிஞ்சி போன பிரிவால்
தினம் அஞ்சி மனதும் சாக
தலைகோதும் தென்றல் கூட
என் தலைவெட்ட தானே கண்டேன்
உனையன்றி வேறெதுவும்
என் உவகைக்கு இங்கு இல்லை
உணர்ந்தாட்போல் மீண்டும் வந்தாய்
நீ -எனை மீட்டு எனக்குத் தந்தாய்
இது போதும் என்ற சொல்லை
ஒரு போதும் சொல்ல மாட்டேன்
நானாக நானும் வாழ
நான் எந்நாளும் உன்னை கேட்பேன்..