Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 360  (Read 913 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 360

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Online Lakshya

சிலைபோல் உருவம் , சில்லறை புன்னகை , மெல்லிய குரல் ,
கருவிழி கொண்ட தேவதையே இக்கவிதை உன்னை போற்றியே...

ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை சொற்க்களால் அடக்கி வைக்க முடியாது...அவளது கடைசி கனம் வரை அவளை சார்ந்தவர்களை நினைத்து கொண்டே வாழ்கிறாள் பெண்...அழகு எண்ணும் வார்த்தைக்கு அர்த்தமாக இருக்கும் நிலவே, உன் வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் உண்டா???

காலங்கள் மாறினாலும்,தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நீயே கருவை சுமக்கும் பாக்கியம் கொண்டவள்...கடவுளுக்கு அடுத்தபடியாக தோன்றும் காவியமே... தியாகத்தின் மறு உருவமே...தேவதையின் வம்சமே...

திருமணம் வரை பெற்றோர்கள் அரவணைப்பில் வாழ்கிறாய்...திருமணம் செய்துக்கொண்டு கணவன் மற்றும்  பிள்ளைகளுக்காக வாழ்கிறாய் நாட்கள் கடந்து சென்ற பின் பேரன் , பேத்தி என்று வாழ்கிறாய்...உனக்காக  வாழப்போவது எப்போது..??

அழகின் ஓவியமே!!! நிலவின் ஈர்ப்பு விசையே!!!
கவலைகள் பல இருந்தாலும் தன் முகத்தில் சிரிப்பை வெளிப்படுத்த மறப்பதில்லையே நீ...

சுதந்திரம் நீ சிறு வயதில் இருப்பதுபோல் வயது வந்த பின் இருப்பதில்லை அது ஏன்??கட்டுப்பாடுகள் உள்ளன என்று நினைத்து உன்னை நீயே பூட்டிக்கொள்ளாதே ... எதற்காக தலை குனிய வேண்டும்??? தலை நிமிர்ந்து நடந்து செல் கண்மணியே...

ஒருபொழுதும் பெண்ணின் மனம் வெறுமையாக தோன்றுவதில்லை... தியாகம், கனவு, குடும்பம் மற்றும் சிறிது நம்பிக்கை என்று நிறைந்திருக்கும்...

கனவுகளை சுமந்து எங்கு செல்வாய் நீ??? சமையலறை கா?? பெண்கள் இருக்கும் இடம் அவர்களே தேர்வு செய்ய வேண்டும் இது தான் பெண் சுதந்திரம்...
« Last Edit: November 27, 2024, 11:00:21 AM by Lakshya »

Offline Sankari

என் செல்ல குழந்தையே
உன் தாடையை கிள்ளி
உன்னை கொஞ்சியதும்
இந்த சமூகம் தான்

இரட்டை சடை சின்ன பெண்ணே
நீ விளையாடும் போது
உன்னை ரசித்ததும்
இந்த சமூகம் தான்

பருவத்தில் உன் பெண்மையை
நீ அறியும் போது
உன்னை கண்டித்ததும்
இந்த சமூகம் தான்

உன் குடும்பத்தின்
மானமும் மரியாதையும்
உன்னை சுமக்க வைத்ததும்
இந்த சமூகம் தான்

அடக்கமா ஒடுக்குமா இருக்க வேண்டும்
என்று கூறியதும்
இந்த சமூகம் தான்

இருந்தாலும் கலகலப்பாக சிரித்த முகத்தோடு
பாசமாக பேச வேண்டும்
என்று சொன்னதும்
அதே சமூகம் தான்

நீ உன் அடையாளத்தை
நீயே தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட
நீ எப்படி இருக்கணும்
சொல்லி குழப்பியதும்
அதே சமூகம் தான்

கல்யாண வயதில்
உன் அழகு, உ ன் நிறம், உன் ஆடை, உன் உருவம் மீது
கருத்து சொன்னதும்
இந்த சமூகம் தான்

புகுந்த வீட்டில் நீ எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்று எச்சரித்ததும்
இந்த சமூகம் தான்

உன் உத்தியோகத்தையும் உன் குடும்பத்தையும்
எப்படி சரி பாதியாக கவனித்துக் கொள்ள வேண்டும்
என்று கூறியதும்
இந்த சமூகம் தான்

ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை போராட்டம் ?
ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை தழுவல் ?
குழந்தை, சிறுபிள்ளை, பதின்ம வயது பெண்,
உத்தியோகி, அம்மா, பாட்டி
இதில் சில அல்ல பல கட்டத்தை
நீ கடந்து வந்திருக்கிறாய்

பெண்ணே உன்னை நீ பார்
இந்த சமூகம்
உனக்கு ஆயிரம் சொல்லலாம்
அதில் உனக்கு 10 சரியாக படலாம்
இல்லை
ஆயிரம் கூட சரியாக படலாம்
நீ கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும்
திரும்பி உன் வாழ்க்கையை பார்
உன் சாதனையை பார்
நிமிர்ந்து நில் !
பெண்ணே நீ ஒரு அழகியே !

உனக்கு வயதானாலும்
உன் முகத்தில் இருக்கும்
ஒவ்வொரு சுருக்கத்திலும்
ஒரு கதை ! ஒரு சாதனை ! ஒரு கண்ணீர் ! ஒரு ஆனந்தம் தெரியும் ...




(Thanks for the correction சாக்ரடீஸ் and SweeTie !  :) )
« Last Edit: November 29, 2024, 07:56:55 PM by Sankari »

Offline Minaaz

யார் சொன்னது மங்கைவள் இல்லலின்றி இளைப்பாரப் பிறந்தவள் என..
அறியாத வயதில் துள்ளித் திரிந்து குதூகலித்ததும் சொற்ப காலம்தான்...

 சோதனைகள் பல சுழன்றாடிட கைகோர்த்து நெருங்கும் பருவங்களை தாண்டிட தைரியத்தை தன்னகத்தே வைத்து தானாய் முன்னேறிவிட்டு மூச்சை இழுத்துப் பிடிக்கும் இறுதித்  தருணத்தையே ஏற்றி நின்றிடுவாள் அவள்...

சூழலோடு சுழன்றாடும் பருவத்தில் வாய் பொத்தி அடக்கம் என்ற பெயரில் ஓர் முடுக்கில் முடங்கிக் கிடக்கும் அவள் சற்று தளிர்விட்டு நிமிர்ந்ததும் திருமணம் என்ற பெயரில் ஓர் குடும்பத்தை தாங்கிப் பிடிக்க தள்ளப்படுகிறாள்...

 தன்னை தானே தேற்றிக் கொண்டு தன் கணவனுக்காய், பிள்ளைகளுக்காய் வாழத் தொடங்கும் அவள் அவளையே மறந்து அவளுக்கே அவள் யாரோ ஒருவராகிப் போகிறாள்...

 ஆனது ஆகட்டும் என்று  அயராது பாடு பட்டு தளராது நின்றிருக்க தள்ளாடும் பருவத்தை எட்டிப்பிடித்திட ஏளனமான பார்வைகள் மனதை ரணமாய் கொன்றிட ஏக்கங்களோடு எட்டிப் பார்க்கிறாள் இளைப்பாற இறைவன் துணை தாங்கிய இல்லத்தை...

அவ்வப்போது அவ்வவ் பருவத்தில் விட்டுச் சென்ற அத்தனையையும் எண்ணியவளாய் கண்ணீரோடு கரைப்பவளைத்தான் இப்பாரினில் சும்மா இருக்கிறாள் என்ற பெயர்...

Offline VenMaThI



மழலையாய் இப்பூமியில் - அழகிய
மகளாய் பூத்த செடி
கண்ணும் கருத்துமாய் பெற்றோர்
கவலை அறியாமல் வளர்த்த செடி ...

வீட்டின் மகிழ்ச்சி பொங்க
விருட்சமாய் வளருமென்றெண்ணி
வேரூன்றி நிற்க வேண்டி
பக்குவமாய் வளர்த்த செடி ...

விளையாட்டாய் நாட்கள் நகர்ந்தது
மகிழ்வாய் வாழ்க்கையும் ஓடியது
காலூன்றி நடந்த நாள் முதல் - இன்று
மேடையில் கைகோர்த்து மணமுடித்த நாள் வரை

தாயிடம் கற்ற பக்குவமும்
தந்தையிடம் கற்ற வீரமும்
தமயனிடம் கற்ற அனுசரிப்பும் - என
இன்னும் தொடர்கிறது பெண்ணின் வாழ்க்கைப்பாடம் ..

தாய் மடியில் கிடந்த மழலை  - இன்று
தாயாகி தன் மழலையுடன் நிற்கிறாள்
வாழ்க்கையில் தான் கற்ற பாடத்தை
தன் பிள்ளைக்கு புகட்ட தயாராக நிற்கிறாள் ...

காலங்கள் மாறினாலும் கவலைகள் கூடினாலும்
தாயுள்ளம் கொண்ட இவள் பாசம்
விருக்ஷத்தின் வேறிலிருந்து வளர்ந்து
இன்றும் நிற்கிறது வானலாவிய மரமாய்

இடியுடன் கூடிய மழையும்
சுள்ளென்று சுட்டெரிக்கும் வெயிலும் என
பருவங்கள் மாறலாம் ஆனால் என்றும் மாறாது
எந்நிலையிலும் வாழ்வில் இவள் காட்டும் அன்பு

பொறுமையின் இருப்பிடாமய் என்றும்
பாசத்தின் பிறப்பிடமாய்
வீரத்தின் உறைவிடமாய் அவள்
குடும்பத்தின் ஆணிவேராய் ...

பொன் இன்றி வாழும் வாழ்வது சாத்தியமே - இவ்வுலகில்
பெண்ணின்றி வாழும் வாழ்வது என்றும் நரகமே
இடர் பல வந்தாலும் வேதனை வருத்தினாலும்
என்றும் மாறாது இவள் நேசமும் பாசமும் தாய்மையும் ...
 
மரமாய் வளர்ந்து மணமிக்க பூவும் தந்தாள்
பலர் பசி போக்க கனியும் தந்தாள்
புயல் காற்று அடித்தாலும் - ஒருபோதும்
நிழல் தர மறுத்ததில்லை மறந்ததுமில்லை ...

கிழ பருவம் எய்தினாலும் கிடையில் தான் விழுந்தாலும்
குடும்பமதை மட்டுமே என்றும் தன் கருத்தில் நிறைத்திருப்பாள் 
பட்டுப்போன மரமும் கூட பாழாய் என்றும் போனதில்லை
வெட்டுண்டு போனாலும் விரகாயாவது பயன்படுமே ...

தன்னலம் இல்லா உயிர் இதுவே என்றும் தாமக்காய் வாழா உயிரிதுவே
நமக்காய் வாழும் உயிரதை என்றும் போற்றாவிட்டாலும் பரவாயில்லை
முடிந்தவரை புறக்கணிக்காமல் ஆவது இருப்போம் ..
பெண்களை மதிப்போம் பெண்ணினம் காப்போம் ...

« Last Edit: November 29, 2024, 06:10:47 AM by VenMaThI »

Offline Angeline


இறைவன் படைத்ததில் அழகிய படைப்பு பெண்கள் …

பெண்மை என்றாலே அது மென்மை…
எல்லாம் பருவத்திலும் ஒரு பெண்ஏதோ ஒன்றை எதிர் பார்த்துக்கொண்டுதான்  இருக்கிறாள்
அது பெற்றோரின் பாதுகாப்பாக இருக்கட்டும்,
உடன்பிறப்புக்களின் அன்பாக இருக்கட்டும் ,
நண்பர்களின் கேளிகளாக இருக்கட்டும் , கணவனின் அரவணைப்பாக இருக்கட்டும் , பிள்ளைகளின் பாசமாக இருக்கட்டும் ,
பேரப்பிள்ளைகளின் சேட்டைகளாக இருக்கட்டும் ..
அவள் வாழ்நாளில் அவள் ஏதோ ஒன்றை எதிர் பார்த்துக்கொண்டுதான் வாழ்கிறாள் ….

பெண்ணே …
சோகம் நிறைந்த உன் கண்கள் சொல்கிறது உன் வாழ்நாள் பயணத்தை …
ஏதோ ஒன்றை எதிர் பார்க்கும் உன் பார்வை  சொல்கிறது
நீ எவ்வளவு அப்பாவி என்று ,
உன் முகத்தில் இருக்கும் அலங்காரம் சொல்கிறது
நீ எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டுமே கொடுப்பவள் என்று

 மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லும் இவ்வுலகத்தில் …
நீ உடுத்தி இருக்கும் ஆடை சொல்கிறது
நீ இன்னும் மாறவில்லை என்று …
உன் நெற்றியில் இருக்கும் நெற்றிசுட்டி சொல்கிறது நீ அழகுக்கே அழகு சேர்ப்பவள் என்று

பெண்ணே !!
பருவ வயதில் உம்முகத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு சொல்கிறது நீ சாதிக்க பிறந்தவள் என்று ,
இளம் வயதில் உம்முகத்தோற்றம் சொல்றிகிறது நீ அனைத்து மேடுபள்ளங்களையும் கடந்து வந்தவள் என்று ,
முதிர் வயதில் உன் ஏக்கமான பார்வை சொல்கிறது
தனிமை மட்டுமே உன் நிரந்தரம் என்று


பெண்ணே !!
அழுத நாட்கள் போதும் …
முன்செல்ல ஆயத்தமாகு …
அரவணைப்பதில் அன்னையாக …
அன்பில் மனைவியாக ..
விட்டுக்கொடுப்பதில் மகளாக ..
பொறுமையில் தோழியாக ..
தியாகத்தில் எல்லையாக .

அவள் அப்படியே இருக்கிறாள்....

« Last Edit: November 28, 2024, 02:27:23 PM by MysteRy »
Angeline

Offline SweeTie

அன்னையும் பிதாவும் 
வழிகாட்டும்  தெய்வங்கள்
அவர்கள்  பேச்சு 
இவள் மூச்சாக வாழும்
பேதை   பாலகி

பள்ளிசெல்லும் பெதும்பை
வெளுத்ததெல்லாம்  பால்
பார்ப்பதெல்லாம்  உண்மை என
ஏமாந்து  வழி மாறும் மாணவி

தூண்டலை காதல் என
கன்னி அவள் நாணுவாள்
கை கொண்டு  கண் மூடுவாள்
 மாயையில் சிக்கும் குமரி 

மங்கை இவள் கன்னங்கள்
மாதுளம் கனி போல
நாணத்தில் சிவக்க
காதல் உரம் போடும்  காதலி
   
காற்றும்  புகாத இடைவெளிவேண்டி 
கணவனின்  அன்பை
சூறையாட வந்த  சுயநலம்
கொண்ட  மணப்பெண் 

குடும்பத்தை  தாங்க வந்த
குத்துவிளக்கு 
 இரண்டு குடும்பங்களின்
அதிபதி  மருமகள்

குடும்ப  பொறுப்புகள்
தலையில் சுமக்கும் பேரிளம்பெண்
முடிசூடா  அரசி 
இல்லத்தரசி  இவள் 

பருவங்கள்  பல கடந்து
சுருங்கிப்போன  சருமம்
பார்வையில் தெளிவின்றி
நரை விழுந்த பாட்டி

தெய்வங்கள் எல்லாம் 
தோற்றுப்போகும்  இவள்
அன்புக்கு முன்னே
பேயும்  இரங்கும் பெண் அல்லவா இவள்  ? 




 
« Last Edit: November 28, 2024, 07:21:17 PM by SweeTie »

Offline RajKumar

தாய் வயிற்றில் கருவாக உருவாகி
குழந்தையாய் இப்பூமியில் பிறந்த பெண்ணே பருவத்திற்கேற் போல் எத்தனை மாற்றம் உன்னுள்

தாயின் அன்பு அரவணைப்பு தந்தை யின் கனிவான பாசத்தில் பிறந்து குழந்தையாக விட்டில் இளவரசியாக விளையாடுவாதும் அவளே

பள்ளி பருவத்தில் பல ஆசைகளை மனதில் கொண்டு பட்டு தாவணி அணிந்து பருவம் அடைவதும் அவளே

படிப்பை முடித்தவுடன் தன்னை பெற்ற தாய் தந்தைக்காக வேலை செய்ய பணிப்பெணயாய் தன்னை மாற்றிக் கொள்ளும் புதுமை பெண்ணும் அவளே

மணப்பெண்யாய் தனது வாழ்க்கை துணையை கைபிடிக்க புகுந்த விட்டிற்கு செல்லும் புதுப்பெண்ணும் அவளே

பிறந்த விட்டில் செல்ல மகளாய் வளர்ந்த பெண் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் நலன் காக்க மருமகளாய் மாறுவதும் அவளே

தன் உத்திரத்தை உயிர் ஆகி கருவாய் வயிற்றில் வளர்த்து குழந்தையை பெற்று எடுக்கும் போது தாய்  ஆகுவதும் அவளே

வாழ்க்கை முழுவதும் தான் பெற்ற குழந்தைகளுக்காவும் கண்வாரக்கவும் தன்னையே அர்ப்பணித்து வாழ்வதும் அவளே


Offline Madhurangi

தாய் தந்தை அகம் மகிழ முகம் பார்த்து குறு நகை புரிந்து ..
தயக்கமின்றி எதிர் பாலின் நட்புதனை உணர்ந்து..
தரணியிலே கவலையின்றி உலா வந்து..
தந்தையவன் அரவணைப்பில் தளிர் நடை  பயின்று முதலடி  வைத்தது
பேதை பருவம்.. 


அடக்கமுடன் அறிவையும் சான்றோர்களிடம் பெற ..
கல்வியெனும்  செல்வமதை முறையாக பெற..
புத்தக மூட்டை தோள் சுமந்து ..
பள்ளியதில்  கனவுகளுடன் முதலடி வைத்தது
பெதும்பை பருவம்.. 


உடலோடு உணர்வுகளிலும் மாற்றங்கள் பிறக்க..
தாயோடு பாட்டியும்  அறிவுரை மொழி பொழிய..
வெட்கமெனும் உணர்ச்சியை இயற்கையும் கற்பிக்க..
பெண்மை எனும் அத்தியாயத்தில் முதலடி வைத்தது.
மடந்தை பருவம்..


பிறந்த வீடு பெருமைகளை சீதனமாக கொண்டு..
புகுந்தகம் சிறக்க சித்தம் கொண்டு..
இல்லற வாழ்க்கை பயில..
மன்னவன் கரம் பற்றி மணவாழ்க்கையில் முதலடி வைத்தது
அரிவை பருவம்..


மங்கையவள் வாழ்க்கையின் அதியுயர் பெருமையாம்..
மண்ணுலகில் சிறந்த பிள்ளைகளை ஈன்று..
மாதாவெனும் ஸ்தானம் பெற்று..
தாய்மை  எனும் நிலையில் முதலடி வைப்பது...
தெரிவை பருவம்..


உற்றவருக்கும், உடையவனுக்கும் தோழியாய் தோள் கொடுத்து..
அழகோடு அறிவும் முதிர்ச்சியுறவே..
குடும்பை தலைவி  எனும் பொறுப்பில் முதலடி வைப்பது..
பேரிளம் பெண் பருவம்..


பருவங்கள் பல கடந்தாலும்.
பொறுப்புகள் பல ஏற்றாலும்..
உளம் கொண்ட உறுதியும், அன்புமே..
பெண் கொண்ட குணம்..



« Last Edit: November 29, 2024, 10:22:21 AM by Madhurangi »