பிறந்தது முதல் தன் மகளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு தனக்குள்ளே பெருமிதம் கொள்ளும் சுயநலம் இல்லாத ஓர் உறவு,,.
தந்தையின் கண்களில் கனவு வாழ்கிறது,
மகளின் சிரிப்பில் உலகம் ஒளிவிடுகிறது.
முள்ளுள்ள பாதையிலும் அவர் கையால் கைபிடித்து,
மலர்களை மட்டும் காட்ட நினைக்கும் உன்னத உறவு ..,
மகளின் முதுகில் சிறகுகள் வளர்க்க,
தன் சிறகுகளை தந்து தன் மகளின் உயரம் காண உந்திவிடும் உந்துசக்தி..,
பல காயங்கள், சோர்வுகள் தன்னை அண்டிய போதும் அவற்றையெல்லாம் கடந்து தன் மகளின் ஒற்றை புன்னகையில் தன் சோகம் தணிக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தைக்காரர்
மகளின் வெற்றிகள் அவரின் வெற்றி மாலைகள் என,
அவளின் சோகங்கள் அவரது காயங்களாக,
தந்தையின் நிழல் எப்போதும் மகளின் அரணாக,
அவளின் புன்னகை அவரின் விலை மதிப்பில்லா வெற்றியாக,
எண்ணி தன்னுள்ளே பரவசம் அடையும் விந்தை மனம் கொண்டவர்...
எந்த நேரத்திலும், தன் மகளை தீண்டும் எந்த துயரும் தன்னை தாண்டியே தீண்ட வேண்டும் என்ற ஆணவம் பிடித்த அற்புத பிடிவாதக்காரர்..
மகளின் காலடி ஒலியே, ஒரு இன்னிசையாக
தந்தையின் வாழ்க்கை முழுதும் சிறந்து சிறப்பிக்கிறது..,
தந்தையின் நிதர்சன செல்வமாய் தன் தந்தைக்கென அவள் இதழ்களில் இருந்து பிரியும் ஒரு முத்தம் மிளிர்கிறது..🍁♥️