சுயநலலமான இப்பூவுலகில், பொதுநலத்துடன் சிந்திந்தித்து,
பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, சில சிந்தனைவாதிகளையும், சிற்பிக்குள் முத்தான பல பண்முகம் கொண்ட கலைஞர்களின் உந்துக்கோளாக இந்த FTC எனும் இணைய தளத்தை அமைத்தமைக்கு நன்றி 🌹
நான் துவண்டு நிற்கும் காலம் எல்லாம், என்னை தோளில் தாங்கிய தோழனாக, தோழியாக இருந்தமைக்கு நன்றி 🌹🌹
என் நாட்டை ஆளும் சில நாச கரங்களும், நயவஞ்சக நரிகளும், எம் மக்களை பிரித்தாள நினைக்கையில்,
தாய் அவள்! பெற்றெடுத்த பிள்ளைகள் அனைத்தும் எனதே என்றென்னுவதை போல.
என் மக்கள் அனைவரையும் ஒரே தளத்தின் கீழ் ஒன்றினைத்தமைக்கு நன்றி 🌹🌹🌹
கற்றது கை அளவு, கள்ளாதது உலகளவு என்பதை நித்தம் என்னில் உரைத்தமைக்கு நன்றி 🌹🌹🌹🌹
உணர்ச்சிகள் அற்ற சில உறவுகள் இருக்கும் இங்கு,
உணர்வுகளின் பால் ஒன்றிணைந்த உன்னத உறவுகள் பலவற்றை தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் 🌹🌹🌹🌹🌹.
FTC இன் தோழமை உறவுகள் அனைவரின் சார்பாகவும், என் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வது.
நேசம் கொண்ட நெஞ்சங்களின் உறவாளன் MN-AHAMED AARON ❤️❤️❤️